உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷனில் தாராளமாக பச்சரிசி வினியோகம்

ரேஷனில் தாராளமாக பச்சரிசி வினியோகம்

சென்னை:தீபாவளி பண்டிகை காரணமாக, ரேஷன் கடைகளில் பச்சரிசிக்கு தேவை அதிகரித்துள்ளது. எனவே, கார்டுதாரர்களின் தேவைக்கு ஏற்ப, பச்சரிசி வினியோகம் செய்யுமாறு, கடை ஊழியர்களுக்கு, உணவு துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், 2.25 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதந்தோறும் இலவசமாக பச்சரிசி, புழுங்கல் அரிசி வழங்கப்படுகிறது. அதன்படி, முன்னுரிமை பிரிவுக்கு, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோவும், அந்தியோதயா பிரிவுக்கு அதிகபட்சம் தலா, 35 கிலோவும்; முன்னுரிமையற்ற பிரிவுக்கு, 20 கிலோவும் வழங்கப்படுகிறது. அனைத்து கார்டுதாரர்களும் தங்களின் தேவைக்கு ஏற்ப பச்சரிசி, புழுங்கல் அரிசியாக வாங்கிக் கொள்ளலாம். தீபாவளி பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், பலரும் பச்சரிசி வாங்கி வருகின்றனர். இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷனில் வழங்க மாதந்தோறும், 3.60 லட்சம் டன் அரிசி தேவை; இதில் சராசரியாக, 30 சதவீதம் பச்சரிசியும், மீதி புழுங்கல் அரிசியும் வழங்கப்படுகிறது. தீபாவளியால் பச்சரிசிக்கு தேவை அதிகரித்துள்ளது. எனவே, கார்டுதாரர்களின் தேவைக்கு ஏற்ப பச்சரிசி வினியோகம் செய்யுமாறு, கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை