உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இழிவாக பேசுவது தான் தி.மு.க.,வின் மரபணு: அமைச்சர் ரமேஷ் காட்டம்

இழிவாக பேசுவது தான் தி.மு.க.,வின் மரபணு: அமைச்சர் ரமேஷ் காட்டம்

திருச்சி: ''பிறரை இழிவாக பேசுவது தான் தி.மு.க.,வின் மரபணு'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறினார்.திருச்சி மலைக்கோட்டையில் நேற்று அவர் கூறியதாவது:திரை உலகில் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித், லண்டனில் பங்கேற்ற கார் பந்தயத்தை, முதல்வர் விஜய் தொடங்கி வைத்ததில் என்ன தவறு உள்ளது? எதையாவது விமர்சித்து கொண்டு இருப்பதால் தான், எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளனர்.முந்தைய தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தான் இன்னும் தொடர்கின்றன. அவற்றை சரி செய்து வருகிறோம்.சிலர் அரசியல் செய்வதற்காக, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தியது தவறல்ல.ஆனால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவதைத்தான் எதிர்க்கிறோம். பிறரை இழிவாக பேசுவது தி.மு.க.,விற்கு கைவந்த கலை; அதுதான் தி.மு.க.,வின் மரபணு.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை கோவிலில், மக்களோடு பொது வரிசையில் தரிசனத்துக்கு சென்றால் என்ன தவறு? அவரை கோவிலுக்குள் அழைத்து செல்லத்தான் அறநிலையத்துறை ஊழியர்கள் இருக்கின்றனரா?கடந்த தி.மு.க., ஆட்சியில், தரிசனத்துக்காக மணிக்கணக்கில் காத்திருந்த மக்களை கேலி செய்த சேகர்பாபுவிற்கு, இப்போது தான் அந்த கஷ்டம் தெரிந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

baala
செப் 16, 2026 09:25

நீங்கள் ல்லோருமே நீயாயஸ்தர்கள். மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களின் ஆட்டத்தை மக்களின் முன் சென்று சொல்லுங்கள். ஆணவம் அழிவின் அடையாளம்.


Manyam
செப் 15, 2026 16:12

நான் திமுககாரனில்லை பொது மக்களில் ஒருவனாக கேட்கிறேன். ஒரு முதலமைச்சராக அரசாங்க அலுவல் நிமித்தமாக மக்கள் பணத்தில் லண்டன் சென்றவருக்கு திரிஷா உடன் என்ன வேலை. இதை எப்படி நாகரீகமாக பேசுவது.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 15, 2026 11:37

சைவம் வைணவம் பேச்சுக்கு பொதுமக்கள் முகம் சுளித்தார்கள். பலர் காரித்துப்பினார்கள். பேசியவன் ஜாலியாக ருக்கிறான். நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்காத வரை இன்னும் நூறு வருடங்களுக்கு அவர்கள் அண்ணா வழியிலும் கலைஞர் வழியிலும்தான் பயணிப்பார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 15, 2026 11:33

திமுக பரம்பரை பற்றி அறுபதைக்கடந்த அனைவருக்கும் தெரியும். அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் திமுகவினர் மீது நடவடிக்கை எடுத்து நாலு பேருக்கு லாடம் கட்டினால்தான் சரியாகுமே தவிர திமுகவைப்பற்றி சொல்வதோ பேசுவதோ எந்த பயனையும்தராது.


RAMAKRISHNAN NATESAN
செப் 15, 2026 10:50

முந்தைய தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தான் இன்னும் தொடர்கின்றன. அவற்றை சரி செய்து வருகிறோம். இதைச் சொல்ல வெட்கப்பட வேண்டும் .....


baala
செப் 15, 2026 17:30

எப்போது முடியும்?


Ashanmugam
செப் 15, 2026 10:01

நீங்களும் உங்க கட்சி தலைவரும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது? உங்க ஆட்சியை வரும் 2027 ஜனவரிக்குள் கலைக்க தீவிரமாக மறைமுக யுக்தியை திமுக தலைவர் முக ஸ்டாலின் தீட்டி வருகிறார். இதுவரை தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் ஊழலை ஒழிப்பேன், லஞ்சத்தை ஒழிப்பேன், மது கடையை மூடுவேன், ஊழல் திமுக அமைச்சர்கள் முதல்வர் உட்பட அனைவரையும் ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் நிருபித்து ஜெயிலில் போடுவேன் என வாய்கிழிய பிரச்சாரம் செய்த முதல்வர் விஜி இப்போ பயந்து நடுங்கி போய் திமுக மீது கை வைக்க முடியாமல் திணறுகிறது..


Shankar C
செப் 15, 2026 09:28

சாமி தரிசனம் செய்ய கோயில் கட்டணம் ஏன்?


Azhagu
செப் 15, 2026 09:21

தீய சக்தியின் மரபணுவை க்ளோனிங் செய்து வளர்ந்து இருப்பது தான் இந்த தூய சக்தி.


புதியவன்
செப் 15, 2026 08:36

அடுத்தவர்களை இழிவாகவும் நாகரிகமற்ற முறையிலும் பேசுவதில் தி.மு.க, த.வெ.கவினர் இருவருமே ஒருவரை ஒருவர் விஞ்சக் கூடியவர்கள்.


ராஜா
செப் 15, 2026 08:15

இழிவாக பேசி ரவுடித்தனம் செய்வதில் திமுக PhD என்றால் தவெக முதுகலை.


RAMAKRISHNAN NATESAN
செப் 15, 2026 10:51

முற்றிலும் சரி .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை