உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டியில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி; தாளாளர் உட்பட 3 பேர் கைது

விக்கிரவாண்டியில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி; தாளாளர் உட்பட 3 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி: விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை லியா லட்சுமி உயிரிழந்த வழக்கில், பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல், 34; இவரது மனைவி சிவசங்கரி, 32: இவர்களது ஒரே மகள் லியா லட்சுமி, 4; விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார். நேற்று பகல் 12.00 மணிக்கு உணவு இடைவேளையின் போது சிறுவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியே விளையாடிவிட்டு, மீண்டும் வகுப்பறைக்கு சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m7prnu8x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆசிரியர் ஏஞ்சல், சிறுமி லியா லட்சுமி இல்லாதால் பிற வகுப்பறைகளில் தேடினார். அங்கும் இல்லாததால், சிறுவர்கள் விளையாடிய இடத்தில் தேடியபோது, அருகில் இருந்த கழிவுநீர் தொட்டி மேல் மூடி தகரம் உடைந்திருந்தது. அதன் வழியே பார்த்தபோது, கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை இருந்தது தெரிய வந்தது.உடன் பள்ளி நிர்வாகத்தினர், குழந்தையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பள்ளியில் கூடியிருந்த பெற்றோர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் மாலை 4.15 மணிக்கு விக்கிரவாண்டி வடக்கு பைபாசில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பலியான குழந்தையின் தந்தை அளித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஜன.,04) இந்த வழக்கில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர் ஏஞ்சல்ஸ்க்கு ஏழு நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

D.Ambujavalli
ஜன 05, 2025 07:15

கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு 3 லட்சம் - எல்லாம் ஏமாளி வரி கட்டுபவர்கள் பணம்தான்- கொடுத்த பின் இந்த பள்ளி management ஆசிரியர்கள் எல்லாம் நாளைக்கே வெளி வந்துவிடுவார்கள். பெற்றவர்களே ,நாங்கள்தான் வளர்க்க மு டியாமல் தொட்டியில் போட்டோம் என்று சொல்ல வைத்துவிடுவார்கள். பல்கலை மாணவனின் பெற்றவரையே சொல்ல வைத்த கில்லாடிகள் ஆயிற்றே


தமிழ்வேள்
ஜன 04, 2025 14:57

வெளிவரும் செய்திகள் வேறுமாதிரி உள்ளன. செப்டிக் டேங்க் ல் விழுந்து மிதந்ததாக சொல்லப்படும் குழந்தையின் உடலோ உடைகளோ நினைவில்லை என்று தெரிகிறது..பிறகு என்ன நடந்தது? இறந்து மருத்துவமனைக்கு கொண்டு செனற இரண்டு மணிநேரம் கழித்தே பெற்றோருக்கு சொல்லப்பட்டிருக்கிறது...ஏதோ வில்லங்கம் நடந்துள்ளது என்பது மட்டும் உண்மை....


shakti
ஜன 04, 2025 13:45

நடவடிக்கையா ??? வாய்ப்பே இல்லை ... பாவாடைகள் போட்ட பிச்சை இந்த ஆட்சி ...


Ramesh Sargam
ஜன 04, 2025 13:09

கைது... ஒரு சப்பைக்கட்டு. அது தண்டனை அல்ல. ஓரிரு நாட்களில் அவர்கள் விடுதலை பெறுவார்கள். குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் மிக மிக கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அது திமுக ஆட்சியில் நடக்க வாய்ப்பில்லை.


Yaro Oruvan
ஜன 04, 2025 13:21

குற்றங்களுக்கு தண்டனை தீயமுக ஆட்சியில் வாய்ப்பே இல்ல. அதுவும் அவனுவலுக்கு ஒட்டு பிச்சை போடுற கும்பல் செஞ்சா அது குற்றமே இல்லன்னு சொல்லுவானுவ உப்பிஸ் .. வாங்குற 200 க்கு


Anand
ஜன 04, 2025 12:41

என்னது, பிச்சையிட்டவர்களையே கைது செய்தார்களா?


visu
ஜன 04, 2025 12:29

பள்ளி என்பதால் தொட்டிய சுற்றி சுவர் எழுப்பி பாதுகாப்பாகவே வைத்துள்ளனர் எனினும் சிறு குழந்தைகள் படிக்கும் பள்ளி எனும்போது ஆசிரியர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் .தொட்டியின் மூடி இடியும் அளவுக்கு பலவீனமாக இருந்ததும் தவறு அது தொட்டி கட்டிய ஒப்பந்ததரன் தவறு


pv
ஜன 04, 2025 13:01

அப்ப பள்ளி நிர்வாகம் இதற்க்கு பெருப்பல்லனு சொல்லுரிங்க?


RAMAKRISHNAN NATESAN
ஜன 04, 2025 11:55

கைதானவர்கள் மீது சட்டம், அரசு, நீதிபதிகள் கருணையுடன் நடந்துகொள்வார்கள் ..........


ponssasi
ஜன 04, 2025 11:47

இந்த பள்ளி என்றில்லாமல் அணைத்து தனியார் பள்ளி பங்குதாரர்கள் கணவன் அல்லது மனைவி என தேடிப்பார்த்தால் கல்வித்துறை அதிகாரி குடும்பம் / ஆசிரியர் குடும்பத்தார் இவர்கள்தான் இருப்பார்கள் பின் எப்படி ஆய்வு நடத்துவார்கள். அந்த பள்ளியில் படிக்கும் பெற்றோர்கள் ஒரு குழுவும் ஆசிரியர்கள் ஒரு காவலர் ஒரு மக்கள் பிரதிநிதி இவர்கள் சேர்ந்து மாதம் ஒருமுறை பள்ளிகளில் ஆய்வுசெய்து அறிக்கை தயார்செய்யவேண்டும் அதுதான் சரியான நடைமுரையாக இருக்கும்.


ram
ஜன 04, 2025 11:44

இதுவே ஹிந்துக்கள் நடத்தும் பள்ளியாக இருந்தால், அனைத்து திருட்டு திமுக ஆட்களும் இந்த பள்ளியை இழுத்து மூட வென்றும் இல்லையென்றால் அரசுடைமை ஆக்க வேண்டும் என்று டான்ஸ் ஆடியிருப்பார்கள்.


Rajalakshmi J
ஜன 04, 2025 11:36

When a Hindus’ school in KumbakoNam caught fire many perishing vatican pope conveyed his condolences with undue alacrity. Invoking Jesus. Why silent and apathetic now ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை