உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,விடம் ஆட்சியை 6 மாதம் கொடுங்க: அன்புமணி

பா.ம.க.,விடம் ஆட்சியை 6 மாதம் கொடுங்க: அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பா.ம.க.,விடம் ஆறு மாதம் அரசு அதிகாரம் இருந்தால் போதும்; எவ்வளவோ நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு நிறைவேற்றி தருவோம்'' என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுதிய, 'போர்கள் ஓய்வதில்லை' நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. வி.ஐ.டி., பல்கலை வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட்டார்.அதை, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் அன்புமணி பேசியதாவது:பா.ம.க., விடம் ஆறு மாதம் அரசு அதிகாரம் இருந்தால் போதும், எவ்வளவோ நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு நிறைவேற்றி தருவோம். தமிழகத்தில் ஆறுகள் எங்கே இருக்கின்றன; எந்தெந்த ஆறுகளை இணைக்க வேண்டும்; எங்கே ஏரி உள்ளது; எங்கே குட்டை உள்ளது என, நாங்கள் பி.எச்.டி., முடித்துள்ளோம்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இலங்கை தமிழர்களுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும், எத்தனையோ பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். தேசிய அளவில் பல்வேறு சமுதாயங்களுக்காக குரல் கொடுத்து, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த தலைவர். ஆனால், அவரை ஜாதி வட்டத்திற்குள் சுருக்க பார்க்கின்றனர்.பா.ம.க., வளரக்கூடாது என்பதற்காக, அரசியல் ஆதாயத்திற்காக, ராமதாசை அவமானப்படுத்தி, கொச்சைப்படுத்துகின்றனர். தலித் எழில்மலையை மத்திய அமைச்சராக்கி, அவர் சைரன் வைத்த காரில் செல்வதை பார்த்து, ராமதாஸ் மனமகிழ்ச்சி அடைந்தார்.பல சமூக முன்னேற்றத்திற்காக போராடிய பா.ம.க., வை, வன்னியர் கட்சி என்றும், ராமதாசை ஜாதி தலைவர் என்றும் சுருக்க பார்க்கின்றனர். எத்தனையோ போராட்டங்கள் நடத்திய ராமதாசுக்கு, எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ''நான் கடவுளிடம் இரண்டு வரங்கள் கேட்கிறேன். ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம், ஒரு சொட்டு நீர் கடலுக்கு போகாத தமிழகம் வேண்டும் என்பதே, அந்த வரங்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Gunasekaran V
டிச 16, 2024 15:06

ஆறுமாதம் எதற்கு? தமிழ்நாடு முழுவதையும் முழுங்கி ஏப்பம் விட்டு விடுவார்கள்..


Mani . V
டிச 16, 2024 05:45

அதுக்கு தேர்தலில் வெற்றி பெறணும் மிஸ்டர் அன்புமணி. மரத்துக்கு மரம் தாவி ஸாரி கட்சிக்கு கட்சி தாவி திரிந்தால் எப்படி கொடுப்பார்கள்?


Raj
டிச 16, 2024 05:29

எல்லா கட்சி தலைவர்களும் என் கட்சிக்கு 6 மாதம் கொடுங்கள், என் கட்சிக்கு 1 வருடம் கொடுங்கள், என்று சொல்லுகிறார்களே தவிர யாரும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என்று சொல்லுவது இல்லை. 60 மாதங்களில் செய்யாததையா இவர்கள் செய்யப்போய்கிறார்கள், எல்லாருக்கும் நாற்காளிக்கு ஆசை அவ்வளவு தான். எல்லாம் முதல்வன் படத்தை பார்த்து சொல்லுகிறார்கள் போல......


Ragu
டிச 16, 2024 05:16

correct தான். மக்கள் யாரும் உங்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இப்படி ஆட்சி செய்தால் தான் உண்டு. உங்கள் கூட்டணி தலைவரிடம் வாய்ப்பு கேளுங்கள். நாட்டையே ஆளலாம்...


Jey a
டிச 16, 2024 05:04

ஆமா ,, கிழிப்பீங்க ,, 40 வருடமா என்னத்த கிழுசீங்க ,,


Kasimani Baskaran
டிச 16, 2024 04:12

இன்றைய நிதி நிலையில் குடிமக்களின் / சாராய வியாபாரிகளின் தயவில்லாமல் தமிழக அரசு இயங்க முடியாது. திராவிட மடத்தினர் தலையெடுத்ததில் இருந்து காகித அளவில் மட்டுமே நீர்நிலைகளில் / நீர்வழித்தடங்களின் மராமத்துப்பணிகள் நடந்துள்ளன. பல காணாமல் போய் விட்டன. நிலைமை இப்படி இருக்கையில் இரண்டையும் ஆறுமாதத்தில் சரி செய்து விட முடியும் என்பது வெற்று உறுதிமொழியேயன்றி நடை முறையில் சாத்தியமில்லாதவை.


புதிய வீடியோ