உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது கொடுத்தா அது!ஈரோடு தொகுதியை விட்டு கொடுத்தால் ராஜ்யசபா சீட்: காங்கிரஸ் எம்.பி., ராகுலுடன் தி.மு.க., பேச முடிவு

இது கொடுத்தா அது!ஈரோடு தொகுதியை விட்டு கொடுத்தால் ராஜ்யசபா சீட்: காங்கிரஸ் எம்.பி., ராகுலுடன் தி.மு.க., பேச முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க., அத்தொகுதியை விட்டுக் கொடுக்கும்படி காங்கிரசிடம் கேட்க உள்ளது. அதற்கு பதிலாக, அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' தருவதற்கு தி.மு.க., தயாராக இருப்பதாக தெரிகிறது. இந்த 'டீல்' பற்றி, காங்கிரஸ் எம்.பி., ராகுலுடன் பேசவும் திட்டமிட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wq5uf5sz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த இளங்கோவன் மறைவு காரணமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அங்கு இடைத்தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, டில்லி சட்டசபை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடக்க வாய்ப்பு உள்ளது.

விருப்பம்

இடைத்தேர்தலில் போட்டியிட, இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் காய் நகர்த்தி வருகின்றனர். இதற்கிடையில், ஈரோடு மாவட்டத்தில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பலரும், இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாவட்ட துணை செயலர் செந்தில்குமார் ஆகிய இருவரும், ஆளுங்கட்சியில் சீட் பெற முயற்சி மேற்கொண்டுஉள்ளனர். தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், பண மழை பெய்யும் என்பதாலும், களமிறங்க காத்திருக்கின்றனர்.முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் மகனின் திருமணம் சமீபத்தில் ஈரோடில் நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றதால், அவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மாவட்ட தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.இதற்கிடையில், காங்கிரசில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டினாலும், 'இடைத்தேர்தல் பார்முலா'வை செயல்படுத்தும் அளவுக்கு பணம் படைத்தவர்கள் இல்லை; காங்கிரசுக்கு செலவு செய்ய, அமைச்சர்களுக்கும் விருப்பம் இல்லை. அதனால், தொகுதியை விட்டுக் கொடுக்கும்படி ராகுலிடம் பேச, தி.மு.க., தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் மேலிடம் தயங்கினால், அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் தருவதாக சொல்லி, வழிக்கு கொண்டு வரும் திட்டமும் தி.மு.க.,விடம் இருப்பதாக தெரிகிறது.இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:வரும் 2025 ஜூலை மாதத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்கள் வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, அ.தி.மு.க., - எம்.பி., சந்திரசேகரன், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

கமலுக்கு வாய்ப்பு

இந்த ஆறு இடங்களுக்கும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் ராஜ்யசபா தேர்தல் நடக்கும். தி.மு.க., சார்பில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள இடங்களில் மூன்று தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.கடந்த முறை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது. அவரது பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. எனவே, ஈரோடு கிழக்கை விட்டுக் கொடுக்கும் பட்சத்தில், காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

பா.ஜ., போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து, அ.தி.மு.க., விரைவில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளது. அ.தி.மு.க., ஒதுங்கிக் கொண்டால், பா.ஜ., களமிறங்குவது நிச்சயம். அ.ம.மு.க., பன்னீர்செல்வம் அணி, த.மா.கா., புதிய தமிழகம், ஐ.ஜே.கே., புதிய நீதிக் கட்சி ஆகியவை பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பு உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

M Ramachandran
டிச 28, 2024 20:08

பேரம் இருக்கட்டும் மக்கள் மறுபடியும் ஏமாந்து போதையில் தங்கள் ஓட்டை பறி கொடுப்பார்களா? அல்லது மண்ணிப்பார்களா அல்லது மறப்பார்களா?


Balasubramanian
டிச 28, 2024 17:56

இந்த டீல் பார்த்தால் மைய்யம் டீல் மாதிரி இருக்கே! தமிழகத்தில் இனி காங்கிரஸ் கதி டில்லி மாதிரி தானோ?


Bhaskaran
டிச 28, 2024 16:32

சைக்கோ தாத்தா இனி எம்பி கிடையாது கலைஞர் கடைசி காலத்தில் ராமானுஜர் காவியம் எழுதின மாதிரி சைக்கோ ஆண்டாள் காவியம் எழுதி போகும் காலத்துக்கு புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டியதுதான் பேத்தி கல்யாண பத்திரிக்கையில் ஸ்ரீமதே ராமானுஜாய நம் வெங்கடேஸ்வரா பெருமாள் துணை என்று போட்டு வெள்ளோட்டம் பாத்தாச்சு


M S RAGHUNATHAN
டிச 28, 2024 14:57

இது ஒரு தப்பிக்கும்.முயற்சி. குடும்பத்தில் இருந்து அதிக அழுத்தம்.வருவதால் அதை தவிர்க்க இளையவரின் யுக்தி.


Narasimhan
டிச 28, 2024 14:47

காங்கிரஸ் விட்டுக்கொடுத்து விடுவார்கள். அவ்வளவு ராசியான தொகுதி. இன்னொரு விக்கெட் விழுந்துவிடுமோ என்ற பயம்தான்


Indhuindian
டிச 28, 2024 12:16

இந்த மொபைல் போனெலாம் ஒரு ஆபரேட்டர் கிட்டேந்து இன்னொரு ஓபெராடோர்கிட்டே மாத்திக்க வசதி இருக்கறமாதிரி வாக்காளர் அட்டையும் அந்த மாதிரி மாத்திக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு பண்ண வசதியா இருக்கும். எங்க எங்க இடைத்தேர்தல் வருதோ அங்கெல்லாம் மாத்திக்கிட்டே இருக்கலாம் தேர்தல் கமிஷன் செய்யுமா செய்யுமா


Indhuindian
டிச 28, 2024 12:13

எப்பிடியும் காசு நாமதான் செலவு பண்ணனும் அதுக்கு நாமளே பேசாம நின்னு கெத்து காட்டலாமில்லயா. இப்படித்தான் 1962 சட்டசபை தேர்தல்லே ஒரு பெரிய தலைவருக்கு முன்னாலே காங்கிரஸ் ஒரு பஸ் முதலாளிய கூப்பிட்டு நீ தான் செலவு பண்ணனும் எப்படியாவது ஜெயிக்கவெச்சிடுன்னு சொன்னாங்க அவரு பாத்தாரு நான் செலவு பண்ணி இன்னொருத்தன் ஜெயிக்கராஎதுக்கு பதிலா நாமளே நிந்துடலாம்னு நிந்துட்டாரு அப்பறம் என்ன அண்டா குண்டங்களாம் குடுத்து சாமி படத்தை வெச்சி சத்தியம் வாங்கிட்டு ஜெயிச்சுட்டாரு அவரோட வெற்றி சரித்திரத்துல இடம் புடிச்சிடுச்சு இல்லையா ஜெயன்ட் கில்லர் அப்டின்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுடாங்க


sankaranarayanan
டிச 28, 2024 09:59

இந்த அரசியல் மாற்றத்திற்காக ஏற்பட்ட பயணமா இது அப்போ மன்மோகன் சிங் இறந்ததற்காக செல்லவில்லையா இதற்காகத்தான் மோடி அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை கொண்டுவந்துள்ளார்


Kasimani Baskaran
டிச 28, 2024 08:58

இதனால் நாட்டுக்கு ஒரு பயனும் கிடையாது.


sankaranarayanan
டிச 28, 2024 08:33

ஓகோ இதற்காகத்தான் இப்போது டெல்லி பயணமா மன்மோகன் இறந்ததற்காக இல்லையா எல்லாமே காரியவாதிதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை