உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஞானசேகரன் சிறையில் அடைப்பு

ஞானசேகரன் சிறையில் அடைப்பு

சென்னை:சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், டிச., 23ம் தேதி இரவு, 7:45 மணிஅளவில், 19 வயது மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டார். இவ்வழக்கில், கோட்டூர்புரத்தை சேர்ந்த, தி.மு.க., அனுதாபி ஞானசகேரன், 37, கைது செய்யப்பட்டார்.போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதால், அவருக்கு கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கைதிகளுக்கான வார்டில் சேர்க்கப்பட்டார். மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், முறிந்த எலும்புகளை இணைக்க, அறுவை சிகிச்சை வாயிலாக, 'பிளேட்' பொருத்தப்பட்டது. தற்போது, அவரது உடல் நிலை சீரானதை அடுத்து, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !