தங்கம் புது உச்சம்: சவரன் ரூ.60,200
சென்னை,:தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஆபரண தங்கம் சவரன், 60,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:அமெரிக்க டாலருக்கு எதிராக, பொது கரன்சியை அறிமுகம் செய்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, 'பிரிக்ஸ்' நாடுகளை, டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக, சீனாவும், ரஷ்யாவும் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, மூன்றாம் வர்த்தகப்போர் உருவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக சர்வதேச முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதனால், பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருவதால், அதன் விலை உயர்ந்துள்ளது. நம் நாட்டில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.