மேலும் செய்திகள்
ஆராய்ச்சியாளர்களுக்கு மகளிர் ஆணையம் உதவித்தொகை
21 minutes ago
வாக்காளர் பெயர் சேர்ப்பு இன்று, நாளை சிறப்பு முகாம்
26 minutes ago
சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின்
26 minutes ago
சென்னை: தமிழகத்தில் நேற்று தங்கம் சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 1,03,120 ரூபாய்க்கு விற்பனையானது. சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில், நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 12,820 ரூபாய்க்கும், சவரன், 1,02,560 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 12,890 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 1,03,120 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு, ஒன்பது ரூபாய் உயர்ந்து, 254 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 9,000 ரூபாய் உயர்ந்தது.
21 minutes ago
26 minutes ago
26 minutes ago