உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 60 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; 3 நாட்களில் மட்டும் ரூ.960 அதிகரிப்பு

60 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; 3 நாட்களில் மட்டும் ரூ.960 அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்றும் அதிரடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது.இந்நிலையில், இன்றும் (ஜன.,17) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ. 59,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ரூ.7,450க்கு விற்பனை ஆகிறது.கடைசி 5 நாட்கள் தங்கம் விலை நிலவரம்;13/01/2025- ரூ. 58,72014/01/2025 - ரூ. 58,64015/01/2025 - ரூ.58,72016/01/2025 - ரூ.59,12017/01/2025- ரூ.59,600கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.960 அதிகரித்துள்ளது. தை மாதத்தில் சுப முகூர்த்த நிகழ்வுகள் அதிகமாக நடக்கும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தத்வமசி
ஜன 17, 2025 12:37

இனி நேர் வழியில் சம்பாதித்தால் தங்கம் வாங்க முடியுமா என்கிற சந்தேகம் வருகிறது. குறுக்கு வழியில் சம்பாதிக்கிறவன் மட்டும் தான் தங்கம் வாங்க முடியும் போல தெரிகிறது. ஆனால் இவ்வளவு தங்கம் விற்பனை ஆகிறது, வருமான வரித்துறையும் வேறு பல துறைகளும் மேம்போக்காக கண்காணிப்பதாகவே தெரிகிறது.


karthikeyan.P
ஜன 17, 2025 12:27

இந்தியா பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்குது என்கிறார்களே ,ஏன் தங்கம் விலை ஏறி கொண்டே செல்கிறது


ஆரூர் ரங்
ஜன 17, 2025 16:46

வாங்கும் சக்தி அதிகரிப்பதால்தான் விலையும் ஏறுகிறது . அதாவது மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை