உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 குறைவு

சென்னை:தமி ழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 1,000 ரூபாய் சரிவு அடைந்தது. சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டிலும் அதன் விலை அதிகரித்து உ ள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 9,380 ரூபாய்க்கும், சவரன், 75,040 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 129 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை, கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து, 9,255 ரூபாய்க்கும், சவரனுக்கு, 1,000 ரூபாய் சரிவடைந்து, 74,040 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 128 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை