உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைவு; 2 நாட்களில் மட்டும் ரூ.2800 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைவு; 2 நாட்களில் மட்டும் ரூ.2800 சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (நவ., 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 குறைந்துள்ளது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,13) ஆபரண தங்கம், கிராம் 11,900 ரூபாய்க்கும், சவரன், 95,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 183 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (நவ.,14) காலை, தங்கம் விலை, கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, 11,840 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் சரிவடைந்து, 94,720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 3 ரூபாய் குறைந்து, 180 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று மாலை, மீண்டும் தங்கம் கிராமுக்கு, 100 ரூபாய் குறைந்து, 11,740 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 800 ரூபாய் சரிவடைந்து, 93,920 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று ஒரே நாளில், தங்கம் சவரனுக்கு, 1,280 ரூபாய் குறைந்தது.இந்நிலையில், இன்று (நவ., 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.11,550க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.175க்கு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
நவ 15, 2025 11:25

உடலில் தங்க ஆபரணம் அணிந்துஇருந்தால் நல்லது. அதனால் சிறிய மோதிரமாவது அணிந்துஇருப்பார்கள். வருடா வருடம் நகை வாங்கி வங்கி லாக்கரில் வைப்பதால் என்ன லாபம்.? திடிரென்று 1000 , 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதுபோல் லாக்கரில் உள்ள தங்க வைர ஆபரணங்களுக்கு ஆபத்து வராது என்பது என்ன நிச்சியம்? வீடுகள் சேப்டி இல்லை .சரி வங்கிகள் மட்டும் பாதுகாப்பா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை