உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 குறைவு

சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,980 ரூபாய்க்கும், சவரன் 71,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 111 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அன்று தங்கம் வாங்க உகந்த நாளாக கருதப்படும் அட்சய திரிதியை என்பதால், பலரும் நகைகள் வாங்கினர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 205 ரூபாய் குறைந்து, 8,775 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,640 ரூபாய் சரிவடைந்து, 70,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 109 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ