உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னைக்கு குட்நியூஸ்; மீண்டும் ரூ.58 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது தங்கம் விலை

இன்னைக்கு குட்நியூஸ்; மீண்டும் ரூ.58 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது தங்கம் விலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் கடந்த இரு தினங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நாள்தோறும் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்பட்டன. அதிரடியாக உயர்வதும், பின்னர் சீராக விலை இறங்குவதும் என நிலைமைகள் மாறின.கடந்த இரு தினங்களாக உயர்ந்தே காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. ஒரு கிராம் 55 ரூபாய் சரிந்து ரூ.7,230 ஆகவும், சவரன் ரூ.57,840 ஆகவும் இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 சரிந்து ரூ.101க்கும், ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் குறைந்து ரூ.1 லட்சத்து ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sampath Kumar
டிச 13, 2024 17:05

இந்த தங்கத்தை தகர்மாக மக்கள் என்றைக்கு தூக்கி ஏறிகிண்டர்களோ அன்னைக்கு தான் இதன் வீழ்ச்சி உறுதி மக்கள் மாறவேண்டும் இல்லாவிட்டால் சாக வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 13, 2024 11:56

தங்கத்தின் விலையைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன... தங்கம் பொதுவாக டாலரால் வகைப்படுத்தப் படுவதால், வலுவான அமெரிக்க டாலர் தங்கத்தின் விலையைக் குறைக்கும்.. மேலும் பணவீக்க விகிதங்களும் தங்கத்தின் விலையைப் பாதிக்கின்றன.. தங்கத்தின் விலை குறைவது குடும்பத்துக்கு நல்லதுதான்... ஆனால் நாட்டிற்கு ??


சமீபத்திய செய்தி