உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்தை கடந்தது!

தங்கம் விலை புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்தை கடந்தது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 12) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.70 ஆயிரத்தை கடந்தது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில தினங்களாக, தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 10), தங்கம் கிராம், 8,560 ரூபாய்க்கும், சவரன், 68,480 ரூபாய்க்கும் விற்பனையாகின.நேற்று (ஏப்ரல் 11) தங்கம் விலை கிராமுக்கு 185 ரூபாய் உயர்ந்து, 8,745 ரூபாயாக அதிகரித்தது. சவரனுக்கு 1,480 ரூபாய் அதிகரித்து, 69,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,770க்கு விற்பனை ஆகிறது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலை. ஒரு சவரன் தங்கம் விலை, எப்போதும் இல்லாத வகையில், 70,000 ரூபாயை கடந்து, நகை பிரியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Karthik
ஏப் 12, 2025 21:58

அரிதான உலோகம் பிளாட்டினம் கிராம் 3000 கும் குறைவா கிடைக்கும் போது உலகெங்கிலும் மக்களுக்கு ஏனிந்த தங்க மோகம் னு தெரியலியே..??


அப்பாவி
ஏப் 12, 2025 13:09

மெடல் எடு. குத்தி விடு. கொண்டாடு.


sivakumar Thappali Krishnamoorthy
ஏப் 12, 2025 12:28

தவறான கருத்து கணிப்புகள் தங்கத்திற்கு ...அட தங்கமே உனக்கு இந்த நிலையா ?


முக்கிய வீடியோ