வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தங்கம் விலை ரூ, 60 ஆயிரத்திற்கு கீழ் வர வேண்டும்
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 04) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் கடந்த ஜூன் 02ம் தேதி திங்கள் கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 8,950 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 71,600 ரூபாய்க்கு விற்பனையானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3vkr6ub1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதே நாளில் மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாய் உயர்ந்து, 9,060 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 880 ரூபாய் அதிகரித்து, 72,480 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (ஜூன் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், சென்னையில் இன்று (ஜூன் 04) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090க்கு விற்பனை ஆகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது.தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கம் விலை ரூ, 60 ஆயிரத்திற்கு கீழ் வர வேண்டும்