உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய உச்சம்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய உச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 23) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தங்கம், வெள்ளி மீது, சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால், நம் நாட்டில் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இம்மாதம், 15ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் சவரன், 1 லட்சத்து, 120 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பின், விலை சற்று குறைந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3jzua0t9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த சனிக்கிழமை தங்கம் கிராம், 12,400 ரூபாய்க்கும், சவரன், 99,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 226 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கச் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 12,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 99,840 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 231 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று மாலையில், மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 12,570 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 1,00,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 23) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
டிச 23, 2025 17:27

வளர்ச்சியோ வளர்ச்சி... குத்துறா மெடலை.


M. PALANIAPPAN, KERALA
டிச 23, 2025 17:16

முடிவு இல்லாத எல்லை இல்லாத உயரத்தை எட்டி மேலும் மேலும் உயர்ந்து கொன்டே இருக்கிறது தங்கத்தை மறக்க வேண்டியதுதான்


Loganathan Kuttuva
டிச 23, 2025 15:39

தங்க மோதிரம் வளையல் அணிந்து வீட்டு வேலை செய்யும் பொழுது தேய்மானம் ஏற்படுகிறது.தங்க நகைகளை உரசி பார்க்கும் சமயத்திலும் சேதாரம் ஆகும் தொகை அதிகம் பத்து மில்லி கிராம் 120 க்கு மேல் ஆகும்.எனவே கவனம் தேவை .


Balasubramanian
டிச 23, 2025 11:12

இனி ஒரு சவரன் கொடுத்தால் தான் ஓட்டு என்று ஓட்டு கேட்டு வரும் வேட்பாளரிடம் கண்டிப்பாக சொல்லி விடவும்! யாரும் கிட்ட நெருங்க மாட்டார்கள்! நிம்மதியாக மனசாட்சி படி வாக்களிக்கலாம்!


aaruthirumalai
டிச 23, 2025 10:50

அநியாயமான விலையேற்றம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை