வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தங்கம் வாங்கவே முடியாத அளவுக்கு உயர்வை கண்டு வருகிறது.... ஜெட் வேகத்தில் கூடுகிறது ஆமை வேகத்தில் குறைகிறது
சென்னை: சென்னையில் இன்று (அக் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 23) ஆபரண தங்கம் கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 174 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று (அக் 24) காலை தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 11,540 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 92,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, 171 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து, 11,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,120 ரூபாய் சரிவடைந்து, 91,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (அக் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,500க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையான ஒரு கிராம் ரூ.170 என்ற அளவிலேயே இன்றும் விற்கப்படுகிறது.
தங்கம் வாங்கவே முடியாத அளவுக்கு உயர்வை கண்டு வருகிறது.... ஜெட் வேகத்தில் கூடுகிறது ஆமை வேகத்தில் குறைகிறது