உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு; ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு; ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (அக்., 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t9nzl6s7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் நேற்று முன்தினம் கடந்த சனிக்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 10,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 87,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில் இன்று (அக்., 06) தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது. வரலாறு காணாத தங்கம் விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ