உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாறு காணாத தங்கம் விலை; முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75,200!

வரலாறு காணாத தங்கம் விலை; முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75,200!

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 07) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஜூலை 23ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம், சவரன் விலை, 75,000 ரூபாயை தாண்டி, 75,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின், விலை குறைந்தது.நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5) தங்கம் கிராம், 9,370 ரூபாய்க்கும், சவரன், 74,960 ரூபாய்க்கும் விற்றது. வெள்ளி கிராம், 125 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (ஆகஸ்ட் 06), தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 9,380 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 80 ரூபாய் அதிகரித்து, 75,040 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 07) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக, சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,400க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை முதல்முறையாக, புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.75,200 விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விலை நிலவரம் பட்டியல்!

கடந்த 7 நாட்கள் தங்கம் விலை நிலவரம்:* இன்று (ஆகஸ்ட் 7) ஒரு சவரன்: ரூ.75,200* ஆகஸ்ட் 6ம் தேதி, ஒரு சவரன்: ரூ.75,040* ஆகஸ்ட் 5ம் தேதி, ஒரு சவரன்: ரூ.74,960* ஆகஸ்ட் 4ம் தேதி, ஒரு சவரன்: ரூ.75,360* ஆகஸ்ட் 3ம் தேதி, ஒரு சவரன்: ரூ.74,320* ஆகஸ்ட் 2ம் தேதி, ஒரு சவரன்: ரூ.74,320* ஆகஸ்ட் 1ம் தேதி, ஒரு சவரன்: ரூ.73.200


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஆக 07, 2025 18:58

அமெரிக்காவிலிருந்து தங்கம் இறக்குமதி பண்ணி ட்ரம்ப்பை சந்தோஷப் படுத்துங்கள்.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 07, 2025 17:31

தங்கம் விலை ஏறனும்


Nada raja
ஆக 07, 2025 14:05

தங்கம் விலை குறைய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை