உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,840 குறைவு

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,840 குறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (நவ.,12) சவரனுக்கு ரூ.1,080 குறைந்திருந்த நிலையில், இன்று (நவ.,13) மீண்டும் ரூ.320 குறைந்தது; ஒரு சவரன் ரூ.56,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,840 குறைந்துள்ளது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்துவிட்டதால் தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று வியாபாரிகள் கூறினர். நவ.,11ம் தேதி தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்பட்டு சவரனுக்கு ரூ. 440 குறைந்து, ரூ.57,760க்கு விற்பனையானது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று (நவ.,12) தங்கத்தின் விலையிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. சவரனுக்கு ரூ.1.080 அதிரடியாக குறைந்து தங்கம் விற்பனையானது. அதன்படி ஒரு சவரன் ரூ, 56,680 ஆக உள்ளது.ஒரு கிராம் ரூ.135 குறைந்து, ரூ.7,085 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று (நவ.,13) மீண்டும் சவரனுக்கு ரூ.320 குறைந்தது. ஒரு சவரன் ரூ.56,360க்கும், ஒரு கிராம் 7,045க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,840 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
நவ 13, 2024 17:01

இன்று தங்கம் வாங்கினேன் 32 கிராம் 22 காரட் செயின் ரூ 2.84 லட்சம். 30 கிராம் 24 காரட் பிளாக் ரூ ௨.௪௬ ஆனல் இ ன்று பேப்பரில் என்ன எழுதியிருக்கின்றது ரூ 7,550 - 24 காரட் ,1 கிராம் 7550 x 30=2,26,500 அதாவது ரூ 7678 - 24 காரட்-1 கிராம்+VA+GST எல்லாம் சேர்ந்து மேலே சொன்ன விலை.இன்னொரு வேடிக்கை அதில் என்ன பிரிண்ட் செய்யப்பட்டிருக்கின்றது 20 கிராம் -24 காரட் - ரூ 2,23,000 ரூ 11,150 ஒரு கிராம் 24 காரட் விலை அப்படித்தானே அக்டோபர் 2024 10 கிராம் -24 காரட் - ரூ 1,12,000 அக்டோபர் 2024 2 அக்டோபர் ரூ 7691-24 காரட்-1 கிராம் விலை .சும்மா பிரிண்ட் பண்ணு என்பது போல இருக்கின்றது. ஏதோ வாங்கணும் வாங்கிவிடுகின்றோம் அவ்வளவு தான்


MARI KUMAR
நவ 13, 2024 15:15

தங்கம் விலை குறைய வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றன. மேலும் தங்கம் விலை குறைந்தால் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள்