உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3,360 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று (டிசம்பர் 29)ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 281 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் சரிந்து, ஒரு கிலோ 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (டிசம்பர் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3,360 ரூபாய்ந்து சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 420 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 258 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 23 ஆயரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 58 ஆயிரத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nagercoil Suresh
டிச 30, 2025 10:24

பண்டிகை காலங்களில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பலர் தங்கள் சிலவுகளுக்காக பங்குகளை விற்பனை செய்வது சாதாரணமானது தான் இதனாலும் விலை சற்று குறைவது வழக்கம் தான்...அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து விலை கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன..வெள்ளியை விட தங்கம் ஸ்திரமான சொத்தாக கருதலாம்...நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது என்பார்கள் அதே போல தான் அதன் விலையும்....


மேலும் செய்திகள்