வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தங்கம் விலை சவரனுக்கு ஏதோ 30,000 ரூபாய் வரை குறைந்து விட்டதோ என நினைத்தேன்........
71000 என்பது விலை குறைவா?
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,560க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,980 ரூபாய்க்கும், சவரன் 71,840 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.நேற்று (ஜூன் 09) தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 8,955 ரூபாய்க்கு விற்கப்பட்டது.சவரனுக்கு 200 ரூபாய் சரிவடைந்து, 71,640 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று (ஜூன் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,560க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை சவரனுக்கு ஏதோ 30,000 ரூபாய் வரை குறைந்து விட்டதோ என நினைத்தேன்........
71000 என்பது விலை குறைவா?