உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம், ஆபரண தங்கம், கிராம் 9,170 ரூபாய்க்கும், சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஆகஸ்ட் 01) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 9,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் சரிவடைந்து, 73,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆகிறது.கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஆக 02, 2025 21:20

140 கோடி பேரும் பெருமிதப் படலாமே..


Jack
ஆக 02, 2025 09:51

தமிழக அரசு ஆண்களுக்கு மதுக்கடை மாதிரி பெண்களுக்கு நகைக்கடை திறக்கலாம் ...செய்கூலி சேதாரத்திலிருந்து காப்பாற்றலாம்


K.Thangarajan
ஆக 02, 2025 20:57

பாவம் மக்கள்,அரசு உங்களுக்கு விருது வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை, புதிய வழிகாட்டியதற்காக.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை