உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எகிறும் தங்கம் விலை: கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு

எகிறும் தங்கம் விலை: கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,10) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. கடந்த ஜன.,08ம் தேதி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,225க்கும், ஒரு சவரன் ரூ.57,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று (ஜன.,09) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.58,080க்கும், ஒரு கிராம் ரூ.7,260க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று (ஜன.,10) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை 58 ஆயிரம் ரூபாயை தொட்டது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜன 10, 2025 17:09

2047 க்குள் வல்லரசாயி எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கண்டிருவோம். அதுவரைக்கும்.பேசாம இருங்க.


Sidharth
ஜன 10, 2025 14:07

நிம்மி ஆட்சியின் லட்சணம் என்று சங்கிகளை போல் நான் சொல்ல மாட்டேன். எனக்கு அறிவு உண்டு.


sundarsvpr
ஜன 10, 2025 11:04

பொன்நகையா புன்னகையா என்று பார்த்தல் நகைகள் அணியாத உடல் மனதில் நிற்கும். நகைகள் அணிந்தவுடன்பு இரண்டுமே அணிகலன் உடல் இரண்டும் அழகாக தோன்றாது.


MARI KUMAR
ஜன 10, 2025 10:29

போற போக்க பார்த்த விரைவில் அறுபதாயிரத்தி தொட்டிடும் போலையே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை