உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் 2வது முறை உயர்ந்த தங்கம் விலை : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2400 அதிகரிப்பு

ஒரே நாளில் 2வது முறை உயர்ந்த தங்கம் விலை : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2400 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (நவ., 13) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில், மதியம் மீண்டும் சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. நேற்று முன்தினம் (நவ.,11), ஆபரண தங்கம் கிராம் 11,700 ரூபாய்க்கும், சவரன் 93,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (நவ.,12) தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 11,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் சரிவடைந்து, 92,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 3 ரூபாய் உயர்ந்து, 173 ரூபாய்க்கு விற்பனையானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gton8vxa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்நிலையில் இன்று (நவ., 13) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,400க்கு விற்பனை செய்யப்பட்டது.மதியம் மீண்டும் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,900க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2400 அதிகரித்துள்ளது. இன்று மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை தாண்டி, புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sundarsvpr
நவ 13, 2025 13:32

சவரன் லட்சத்தை எட்டும்போது தங்கம் வாங்க இயலாதபல கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி கொண்டாடுவது ஒரு விழா போல் இருக்கவேண்டும். வாங்கியவர்கள் சிந்திக்கவேண்டும். தங்கம் விலை அகில பாதாளத்திற்கு போகாது என்ற நம்பிக்கை உண்டா?


அப்பாவி
நவ 13, 2025 10:38

ரூவா மதிப்பு கிடு கிடுன்னு உசந்திருச்சு அதான்.... டாலருக்கு 100 ரூவாயாயிடும்


ديفيد رافائيل
நவ 13, 2025 10:37

சிறிது நாட்களாக குறையும் போதே நினைச்சேன் இப்படி தான் பண்ணுவாங்கன்னு. நல்ல வேளையாக rate கம்மி ஆனப்ப digital gold வாங்கிட்டேன்.


ஸ்ரீ
நவ 13, 2025 10:19

தேவையற்ற செய்தி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை