உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்கம் விலை: சவரன் ரூ.66,400 ஆக விற்பனை!

ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்கம் விலை: சவரன் ரூ.66,400 ஆக விற்பனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரன் ரூ.66.400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. மார்ச் 13ம் தேதி சவரன் ரூ.440 அதிகரித்து, சவரன் ரூ.64,960 என்ற புதிய உச்சத்தை எட்டியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5j7qp3er&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்றும் (மார்ச் 14) தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது. காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ரூ.65,840 ஆக விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.110 அதிகரித்து, ரூ. 8,230 ஆக விற்பனையானது. இந் நிலையில், ஒரே நாளில் 2வது முறையாக காலையில் உயர்ந்தது போன்று மாலையிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.8300க்கும், சவரன் ரூ.66,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று ஒரேநாளில் தங்கம் விலை இருமுறை உயர்ந்து (சவரனுக்கு ரூ,1440) விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.நேற்று சவரன் ரூ.65,000ஐ நெருங்கிய தருணத்தில், இன்று காலையில் அதையும் கடந்தது. தற்போது ஒரே நாளில் (மார்ச் 14) சவரன் ரூ,1440 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

अप्पावी
மார் 14, 2025 21:51

இந்திய பொருளாதாரம் ஆறே மாதத்தில் ஒண்ணாமிடத்துக்குப் போனாலும் வியப்பில்லை. அவ்வ்ளோ வளர்ச்சி.


ديفيد رافائيل
மார் 14, 2025 17:40

230 rupees rate குறைக்கும் போதே நான் comments பண்ணேன் பெரிய ஆப்பு வைப்பானுங்கன்னு. அது இந்த ரூபத்தில் வந்திருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை