நல்லகண்ணு அட்மிட்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 101, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லகண்ணு, வயது மூப்பு காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபடி மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 'நலமுடன் இருக்கும் அவர், ஓரிரு நாளில் வீடு திரும்புவார்' என டாக்டர்கள் தெரிவித்தனர்.