உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி; தமிழகத்தில் 963 கி.மீ., நீளத்துக்கு புதிய நான்கு வழிச்சாலை!

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி; தமிழகத்தில் 963 கி.மீ., நீளத்துக்கு புதிய நான்கு வழிச்சாலை!

சென்னை: தமிழகத்தில் 963 கிலோமீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் நான்கு வழிச்சாலையின் மொத்த நீளம் 3,698 கி.மீ., ஆக அதிகரிக்கும்.மொத்தம் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.தமிழகத்தில் சாலைப் போக்குவரத்து வசதி, இதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும். புதிய சாலைத் திட்டங்களால், தமிழகத்தில் இருக்கும் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை, 72 என்பதில் இருந்து 90 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.மாநிலம் முழுவதும் சாலை இணைப்பை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நான்கு வழிச்சாலைகள் பேருதவியாக இருக்கும்.இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை பற்றிய சில விவரங்கள் வருமாறு:தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 6,805 கி.மீ.,இதில் 2 வழிப்பாதை: 1,282 கி.மீ.,சர்வீஸ் தடம் கொண்ட 2 வழிப்பாதை: 2,383 கி.மீ.,6 வழிப்பாதை: 384 கி.மீ.,8 வழிப்பாதை : 21 கி.மீ.,இது மட்டுமின்றி, 767 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இவை, 12லிருந்து 15 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்.விக்ரவாண்டி- தஞ்சாவூர்(163.கி.மீ.,)மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை (106 கி.மீ.,) குடிப்பலாவிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் (பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை) 106 கி.மீ.,நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை (65 கி.மீ.,) திண்டுக்கல் -பொள்ளாச்சி(131.9 கி.மீ)விழுப்புரம்- நாகப்பட்டினம்(125 கி.மீ) கூடுதலாக 135 கி.மீ., துாரம் திண்டுக்கல்-தேனி-குமுளி மற்றும் 60 கி.மீ துாரம் நீரலுாரு- தொரப்பள்ளிஅஹ்ரஹாரம்- ஜித்தண்ட் ஹள்ளி சாலைகள் 20 லிருந்து 30 சதவீத பணிகள் நிறைபெற்றன.மீதமுள்ள கட்டுமானப்பணிகள் கமலாபுரம் (திண்டுக்கல்) -ஒட்டன்சத்திரம் மற்றும் மடத்துக்குளம்-பொள்ளாச்சி சாலைகள் டோல் பிளாசாக்களோடு விரைவாக நடந்து வருகின்றன.பாறைப்பட்டி மற்றும் கோமங்கலம் சாலை விரைவில் பணிகள் முடிவடைய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V Gopalan
பிப் 07, 2025 16:47

First of all the Govt of India to remove the toll gates which have already reached their target instead of go on not only collecting and periodically increasing is nothing but taxing the general public and commercial transports which are transporting goods, veges et all but free for MPs/MLAs, Ministers to President.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
பிப் 04, 2025 23:20

டோல் கட்டண கொள்ளை ஆரம்பமாகும்.


Karunakaran
பிப் 04, 2025 20:34

ரொம்ப சந்தோசம். நல்ல செய்தி . இதன்கூடவே எத்தனை வருஷம் டோல்கேட் வசூல் பண்ணலாம்னு சொல்லி விடுங்கள்


Chess Player
பிப் 04, 2025 20:28

தெளிவாக இருக்கட்டும் - இவை தேசிய நெடுஞ்சாலைகள் - மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள்


Chess Player
பிப் 04, 2025 20:26

Let’s be clear- these are National Highways - Central Government projects