உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் சீர்மிகு பணிகள்: அறிக்கை வெளியிட்டு தமிழக அரசு பெருமிதம்

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் சீர்மிகு பணிகள்: அறிக்கை வெளியிட்டு தமிழக அரசு பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் பல்வேறு சீர்மிகு பணிகள் செய்யப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1.17 லட்சம் காவல் பணியாளருக்கு ரூ.5,000 வீதம் ரூ.58.50 கோடி கொரோனா உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆவடி, தாம்பரம் புதிய காவல் ஆணையரகங்களுக்கு ரூ.44.46 கோடியில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தீ விபத்திலும், வெள்ளத்திலும் சிக்கிய ரூ.605 கோடி மதிப்புடைய உடைமைகளும் மீட்கப்பட்டுள்ளன. தீயணைப்பு, மீட்பு பணியாளருக்கு பயிற்சி தரும் விதத்தில் ரூ.39.30 கோடியில் கழகம் அமைக்கப்படும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் பல்வேறு சீர்மிகு பணிகள் செய்யப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் மக்கள் அதிகம் கூடும் அனைத்து விழாக்களும் அமைதியாக நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 22:51

ஜாஃபர் சாதிக் துணையுடன் சட்டம் ஒழுங்கு பாதுக்காக்கபடுகிறது. .


subramanian
ஜூலை 25, 2024 22:27

உலகில் உள்ள அனைத்து தீவிரவாத இயக்கம் எல்லா திசைகளிலும் எல்லா இடங்களிலும் எல்லா திட்டங்களையும் வகுக்க சிறந்த இடம் இன்று திமுக ஆட்சி நடக்கும் தமிழகம். கள்ள சாராயம், போதை புழக்கம், கொலை, கொள்ளை, கடத்தல், மணல் திருட்டு இதெல்லாம் நடக்கும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஸ்டாலின் பார்வைக்கு மட்டும் தான் தெரியும். தகுதியில்லாத தற்குறி சுடலை.


subramanian
ஜூலை 25, 2024 22:19

அண்டப்புளுகு ஆகாசப்புளுகு . பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக. ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி பொய். இரண்டு ஏக்கர் இலவச நிலம் பொய். மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் திட்டம் பொய். இப்போது தன்னை தானே பாராட்டிக்கொண்டு கருணாநிதி தனம் செய்கிறார். பட்டப்பகலில் வெட்டி கொலை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எல்லாம் தூங்கும் நேரம் . தமிழகத்தின் இருண்ட காலம்.


Godyes
ஜூலை 25, 2024 20:18

தமிழக மக்களில் பிடிவாத வாக்காளர்கள் அதிகம்.


R.MURALIKRISHNAN
ஜூலை 25, 2024 17:55

அறிக்கை விட்ட கட்டிடத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை ...


S. Gopalakrishnan
ஜூலை 25, 2024 17:26

தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கழகம் அமைக்கப்படும் ?


Anand
ஜூலை 25, 2024 17:11

இப்படி பொய்யுரைத்து திரிகிறார்கள்.


Nandakumar Naidu.
ஜூலை 25, 2024 16:46

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இந்தியா முழுவதும் சந்தி சிரிக்கிறது. எங்கு போய் முட்டிகொள்வது.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ