உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னரும், ஆட்சியாளர்களும் கணவன், மனைவி போல இருக்க வேண்டும்; பிரேமலதா யோசனை

கவர்னரும், ஆட்சியாளர்களும் கணவன், மனைவி போல இருக்க வேண்டும்; பிரேமலதா யோசனை

சென்னை; கவர்னரும், ஆட்சியாளர்களும் கணவன், மனைவி போல இருக்க வேண்டும் என்று தே.மு.தி.க.,பொதுச்செயலாளர் பிரேமலதா யோசனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bzkolzei&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் தொடர்ந்து பல பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது.இதை பலமுறை நாம் பார்த்திருக்கிறோம். அவர்( கவர்னர்) கோபித்துக் கொண்டு வெளியே செல்வது, மறுபடியும் இவர்கள் (ஆட்சியாளர்கள்) தேநீர் விருந்தில் கலந்து கொள்வது என தொடர்கதையாக போய் கொண்டிருக்கிறது.ஒரு கவர்னரும், ஆட்சியாளரும் கணவன், மனைவி போல நல்ல புரிந்துணர்வுடன் இருந்தால் தான் இந்த நாட்டுக்கு நல்லது. மக்களுக்கு நல்லது. அதை விட்டுவிட்டு தங்களின் சொந்த விருப்பங்களை மனதில் வைத்து செயல்பட்டால் நிச்சயமாக நாட்டுக்கும், மக்களுக்குமே அது பாதிப்பு.எனவே இரு தரப்பும் அதை புரிந்து கொள்ள வேண்டும். அவரவருக்கு என்று ஒரு அதிகாரமும், உரிமையும் உள்ளது. புரிந்துணர்வுடன் செயல்பட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.இவ்வாறு பிரேமலதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Matt P
பிப் 08, 2025 01:01

வேற உதாரணமே கிடைக்கலையா? சில நடிகைகள் 5 கல்யாணம் பண்ணிக்கிறாங்க.


Annan
பிப் 07, 2025 23:04

ஆளுநர் ஆனவர் ஒரு வேக கட்டுப்பாட்டு கருவி போல செயல்படுகின்றவர். குதிரைக்கு கடிவாளமும் சாட்டையும் தேவைப்படுவது போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கம் எப்பொழுதெல்லாம் வரம்பு மீறிய அல்லது மந்தமான செயல்பாடுகளை கொண்டுள்ளதோ அப்போதெல்லாம் அவற்றை சுட்டிக்காட்ட / கட்டுப்படுத்த கடமைப்பட்டவர்.


என்றும் இந்தியன்
பிப் 07, 2025 18:00

இதில் யார் கணவர்??? யார் மனைவி???.கவர்னர் - கணவர் ஆட்சியாளர்கள் -மனைவி . அப்படித்தானே . மனைவி சொல் கேட்டு பணிந்து நடப்பதே நல்லகணவனுக்கு அழகு அப்படித்தானே


என்றும் இந்தியன்
பிப் 07, 2025 18:01

இதில் யார் கணவர்??? யார் மனைவி???.கவர்னர் - கணவர் ஆட்சியாளர்கள் -மனைவி . அப்படித்தானே . மனைவி சொல் கேட்டு பணிந்து நடப்பதே நல்லகணவனுக்கு அழகு அப்படித்தானே


என்றும் இந்தியன்
பிப் 07, 2025 18:00

இதில் யார் கணவர்??? யார் மனைவி???.கவர்னர் - கணவர் ஆட்சியாளர்கள் -மனைவி . அப்படித்தானே . மனைவி சொல் கேட்டு பணிந்து நடப்பதே நல்லகணவனுக்கு அழகு அப்படித்தானே


Senthoora
பிப் 07, 2025 16:46

அம்மா உங்களுக்கு உங்க கணவர் அளவுக்கு அதிகமாக இந்தியா, மலேசியாவில் சொத்து சேர்த்து விட்டுவிட்டுப்போய்விட்டார். அதைவைத்து அவரின் அறக்கட்டளை பணியை செய்யுங்க. தமிழ் நாடு போற்றும். அரசியல் சாக்கடைகளுக்கு நீங்க பதிலோ. அல்லது அறிக்கை விடாதீர்கள், நாடு போற்றும் உங்களை.


Ganesan
பிப் 07, 2025 16:45

Said 100 % Correct.


R.Balasubramanian
பிப் 07, 2025 15:54

உண்மை. சண்டை சச்சரவுகளுடன்


முக்கிய வீடியோ