உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டிரைக்: பஸ் போக்குவரத்து பாதிப்பு இல்லை; பெரும்பாலான பஸ்கள் ஓடுகிறது

ஸ்டிரைக்: பஸ் போக்குவரத்து பாதிப்பு இல்லை; பெரும்பாலான பஸ்கள் ஓடுகிறது

சென்னை: தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தாலும் , தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் இயங்கியது. முன்பதிவு செய்தவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.சென்னையில் மொத்தம் உள்ள 3,092 பஸ்களில் 2,749 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆவடி பணிமனையில் இருந்து 100 சதவீத பஸ்கள் இயங்குகிறது. கோவையில் 94 சதவீத பஸ்களும், https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j9x17pdm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சேலத்தில் 1,063 பஸ்கள் இயங்குகிறது. மயிலாடுதுறையில் 55 பஸ்களில் 44 பஸ்கள் இயங்குகிறது. பெரும்பாலானா மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் மேலான பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தன.தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று ஜனவரி 09ம் தேதி காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட நகரங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கி வருகின்றன. கன்னியாகுமரி நாகர்கோவிலில் சில பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும் கிராமப்புறங்களில் பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Gallery

ஆம்னி பஸ்களை இயக்க தயார்

பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படும் நிலையில். அரசு கேட்டுக் கொண்டால் பகல் நேரங்களில் பஸ்களை இயக்க தயார் என்று ஆம்னி பஸ்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பல்லவன் சாலை பணிமனையிலும் மதுரையில் பொன்மேனி பணிமனையிலும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

95.33% பஸ்கள் இயக்கப்படுகின்றன

பஸ் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலை 11:00 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 16,288 பஸ்களில், 15,528 பஸ்கள் இயக்கப்படுவதாகவும்; இது 95.33 சதவீதமாகும் எனவும் சென்னையில், 3,233 பஸ்களில், 3,129 பஸ்கள் இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

ரமேஷ்VPT
ஜன 10, 2024 03:35

அரசு பேருந்தில் பணிபுரியும் எல்லோருக்கும் சம்பளம் 40000க்கு மேல தான், தனியார் பேருந்தில் சம்பளம் அவ்வளவு கிடையாது, இவர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு இனிமேல் ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு ஆட்களை எடுக்கும் போது அரசு சம்பளத்தை குறிப்பிட்ட வரையறைக்குள் நிர்ணயிக்க வேண்டும். இல்லையேல் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முடியாது, அரசு காஜானாவும் காலியாகி கொண்டிருக்கும்.


Ram RV
ஜன 09, 2024 23:07

குறைந்தது 40 பஸ்கள் ஓடவில்லை என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன.


somasundaram alagiasundaram
ஜன 09, 2024 22:17

ஊடகங்களில் அமைச்சர் கூறும் கருத்துக்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது 25 பஸ்கள் தான் ஓடுகிறது


DVRR
ஜன 09, 2024 16:17

தமிழகம் முழுவதும் மக்களுக்கு பாதிப்பின்றி பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தமிழ்நாடு முழுவதும் 93.90% பஸ்கள் இயக்கம் - போக்குவரத்துத்துறை தகவல்எப்போ???போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது???அப்போ வேலைநிறுத்தம் செய்பவர்கள் அரசாங்க பஸ் ஊழியர்களா இல்லையா???இதே ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் 93.90% பேருந்துகள் இயங்கவில்லை என்று வந்திருக்கும்.


Balasubramanyan
ஜன 09, 2024 15:57

Temporary drivers. This govt spent 41 crores for half an hour car race and wants to spend 81vcrores for pe. But this govt needs more money to pay the legitimste demands .are they not ashaned. Already repors are coming about accidents at various places. Not ashamed to spend for a person who is jail as minister perks.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 09, 2024 14:21

ரொம்ப சரி. இப்பொழுது இருக்கும் ஊழியர்களை வைத்து 100 சதவிகிதம் பேருந்துகளை இயக்க முடிகிறது என்றால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் எல்லோரும் எப்போதுமே வேலை செய்யாத, தண்ட சம்பளம் வாங்குவோர் என்று நிரூபணம் ஆகிறது. எனவே அவர்கள் அனைவரையும் வேலையை விட்டு நீக்கிவிடலாம். திராவிட விடியா மாடல் அரசு நடவடிக்கை எடுக்குமா?


விடியல்
ஜன 09, 2024 14:19

திருச்சியில் பாதி பஸ்கள் கூட ஓடவில்லை.ஒரு ஓரு டிரிப் ஒரு பஸ் என்று கணக்கு காட்டி இருப்பார்களா ஆண்டவனுக்கு கூட தெரிவாய்ப்பில்லை


Seshan Thirumaliruncholai
ஜன 09, 2024 13:46

பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உண்மை. தற்காலிக பணியாளர்வைத்து.தனியார் பேருந்துகள் சேர்த்து. எதனை % ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள் என்ற உண்மை நிலவரம் அறிந்தால்தான் போராட்டம் வெற்றியா தோல்வியா என்பது தெரியும். அரசில் நிதி இல்லையென்றால் அரசு தோற்றுவிட்டது என்று கருதவேண்டும். அல்லது ஊழியர்கள் கோரிக்கை நியாயமற்றது என்று அரசு மக்களுக்கு அறிக்கை மூலம் கூறவேண்டும்


சங்கையா,முதுகுளத்தூர்
ஜன 09, 2024 13:31

//நல்லவேளை பஸ் எல்லாம்// ஏலே கனோசு நீ உபியாக இருக்கும் வரை உன் தலையில் உன்னைத் தவிர வேறு யாரும் மண்ணை அள்ளி போட முடியாது நீ அடிக்கடி சொல்லுவியே புரிஞ்சவன் பிஸ்தா என்று நான் சொல்றேன் புரிஞ்சவன் சங்கி புரியாதவன் உபி...????????


Anantharaman Srinivasan
ஜன 09, 2024 13:24

மக்கள் பதட்ட படாமலிக்க. 80% 90% பஸ்கள் ஓடுகின்றன என சொல்லிவைப்போம். மக்கள் எண்ணிய பார்க்க போகின்றனர் என்ற எண்ணம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ