உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவாரூரில் அரசு பஸ்- வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பரிதாப பலி

திருவாரூரில் அரசு பஸ்- வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், நாகப்பட்டினத்தில் இருந்து, ஏர்வாடி சென்ற அரஸ் பஸ்சும், வேளாங்கண்ணி சென்ற ஆம்னி வேனும் இன்று (மே 04) காலை 7:00 மணிக்கு,நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2armvftj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
மே 04, 2025 13:01

கதி சக்தி தூள் பறக்குது. கண்டவனுக்கு கார் விக்கிது. சாலை விதிகள் காத்தில்.பறக்குது. உயிரைக் கையில் புடிச்சிக்கிட்டு போக வேண்டியிருக்குது. எல்லோருக்கும் தலை போகிற அவசரம். தலையோடு உடலும், உயிரும் போகிறது.


Kasimani Baskaran
மே 04, 2025 10:58

படத்தைப்பார்த்தால் அரசு பேருந்து முன்னால் போய்க்கொண்டு இருந்த வேனில் மோதியிருப்பது போல தெரிகிறது. குறைந்தபட்சம் நிற்கக்கூடிய தூரம் கூட இல்லாமல் பின்தொடர்ந்த பேரூந்துக்குத்தான் விபத்துக்கு காரணம். கவனம் சிதறி இருக்கலாம் அல்லது திடீர் என்று சிறிது நேரம் தூங்கிக்கொண்டே ஓட்டி இருக்கலாம்.


Nada Rajan
மே 04, 2025 10:57

ஆழ்ந்த இரங்கல்


முக்கிய வீடியோ