உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  உதிரி பாகங்கள், ஆட்கள் பற்றாக்குறை அடிக்கடி விபத்தில் சிக்கும் அரசு பஸ்கள்; தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

 உதிரி பாகங்கள், ஆட்கள் பற்றாக்குறை அடிக்கடி விபத்தில் சிக்கும் அரசு பஸ்கள்; தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசு போக்குவரத்துக் கழகங்களில், உதிரி பொருட்கள் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால், பஸ்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன' என, தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், தினமும் 20,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 6,000க்கும் அதிகமான பஸ்கள் மிகவும் பழமையாக உள்ளன. குறிப்பாக, மாவட்டங்கள் இடையே செல்லும் பஸ்கள், டவுன் பஸ்கள், அடிக்கடி பழுதாகின்றன. பழைய பஸ்களில், அடிச்சட்டம், உதிரி பாகங்கள் இருக்கைகள், ஜன்னல்கள், மேற்கூரை போன்றவை, தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், போதிய அளவில் உதிரி பொருட்கள் இல்லை. காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதன் விளைவாக, அரசு பஸ்கள் அதிகம் விபத்துக்குள்ளாகின்றன என, புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலர் கமலக்கண்ணன்: அரசு போக்கு வரத்துக் கழகங்களில், 6,000க்கும் அதிகமான பஸ்கள், 15 ஆண்டுகளை கடந்தும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை நீக்கும் வரை, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளை, தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஆனால், அரசு போக்குவரத்துக் கழகங்களில், டயர், கியர்பாக்ஸ் என பல்வேறு உதிரி பொருட்கள், பற்றாக்குறை உள்ளன. அதுபோல், பணிமனைகளில் ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. மேலும், ஒப்பந்த ஊழியர்களுக்கு, போதிய அளவில் பயிற்சி அளிக்காமல் பஸ்களை இயக்கி வருகின்றனர். இதனால், அரசு பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுகநயினார்: அரசு போக்குவரத்து கழகங்களில், ஒரு கி.மீ.,க்கு எட்டு ரூபாய் என கணக்கீடு செய்து, முன்பெல்லாம் உதிரி பொருட்கள் வாங்கப்பட்டன. தற்போது, ஒரு ரூபாயாக குறைத்துள்ளனர். இதனால், புதிதாக உதிரி பாகங்கள் வாங்காமல், ஏற்கனவே உள்ளவற்றை சீரமைத்து, மீண்டும் பஸ்களை இயக்குகின்றனர். இதுவும், பஸ் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறது. மேலும், அரசு போக்குவரத்து கழகங்களில், 35,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, நிரந்தர பணியாளர்கள் நியமிக்க, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள் பதில் என்ன?

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'அரசு பஸ்களில் மிகவும் பழைய பஸ்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். இதற்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், பழைய பஸ்கள் குறைவு தான். 'விபத்துகளும் குறைந்துள்ளன. எனினும், விபத்தில்லாத பயணத்திற்காக, ஓட்டுநர் விழிப்புணர்வு மற்றும் புத்தாக்க பயிற்சி அளித்து வருகிறோம். பராமரிப்பு பணிகளிலும் முழு கவனம் செலுத்தி வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ram pollachi
டிச 27, 2025 14:34

தொழில் சங்கங்கள் தலையீட்டால் இந்த துறை நசுங்கி விட்டது.... ஓய்வு இல்லாமல் வண்டியை ஓட்டிக்கிட்டே இருந்தால் அது என்ன ஆகும்? அரசு வண்டிக்கு வாய் இருந்தால் கத்தி கதறி அழுதது விடும், என்ன தான் புத்தம் புதிய வண்டியாக இருந்தாலும் ரோட்டில் இருக்கும் வெள்ளை மற்றும் மஞ்சள் கோட்டில் ஏறி இறங்கினால் போல்ட், நட்டு கூட கலண்டு விடும்... அதை விட வாகன ஓட்டிகளின் இதயமே நின்றுவிடும். ஒரு வண்டியை பலர் மாற்றி மாற்றி இயக்குவதால் அதன் ஆயுள் ???


Amar Akbar Antony
டிச 27, 2025 12:52

அதெல்லாம் கிடையாது. நாங்க வோல்வோ பேருந்து விட்டிருக்கோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இப்படிப்பட்ட பேருந்த் தனியாருக்கு இணையாக விட்டிருக்கோம். எங்களுக்கு போட்டோ ஷூட்டும் பகட்டையாக வெளியிடுவதும் தான் முக்கியம்.


Gajageswari
டிச 27, 2025 12:43

A country can be said to be developed When rich pupils use public transport tem. பின் எப்படி வளர்ந்த மாநிலமாக சித்தரிக்கப்படுகிறது


மொட்டை தாசன்...
டிச 27, 2025 10:59

காலம்காலமாய் லஞ்சம், கமிஷன் என புரையோடிய போக்குவரத்து கழகங்கள். போதாக்குறைக்கு பல வருடங்களாக கட்டண உயர்வு இல்லாதது மற்றும் பெண்களுக்கு இலவசம் என அரைகுறையாக வரும் வருமானமும் போக்குவரத்து கழகங்களுக்கு நின்றுவிட்டது . எனவே புதிதாக உதிரி பாகங்கள் வாங்காமல், ஏற்கனவே உள்ளவற்றை பழுதுபார்த்து பேருந்துகளை இயக்கும்போது விபத்தில் சிக்குவதை தவிர்க்க முடியாது.


Dinesh Kumar
டிச 27, 2025 09:52

டிராபிக் சிஸ்டம் மற்றும் வாகனங்களை இயக்குதல் பற்றிய புரிதல் நம் மக்களிடம் குறைந்துவிட்டது மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது மற்றும் மக்களிடம் பொறுமை இல்லை பெரிய வாகனங்களுக்கு பின்னால் அல்லது பேருந்துக்கு பின்னால் சென்றால் உருட்டி செல்வார்கள் என அந்த பேருந்தை முந்தி செல்வர் ஆனால் முன்னாள் சென்றவுடன் மெதுவாக செல்வார்கள் ஹார்ன் அடித்தால கடுப்பாகி உனக்கென்ன அவசரம் சொல்லி சண்டைக்கு வருவார்கள் வீட்டில் காட்டும் அந்த மிரட்டல் உருட்டலை வெளியே வந்தும் காண்பிக்கிறார்கள் அதற்காக நேரத்தை வீணடிக்கின்றனர் எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லை அதனால் போக்குவரத்து விதிகள் கடுமை ஆக படவேண்டும் . நன்றி . நான் ஒரு அரசு ஒப்பந்த ஓட்டுநர் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளேன்


Raj
டிச 27, 2025 08:46

அரசு பஸ்கள் எல்லாம் மக்களுக்கு எமனாக மாறி விட்டது. முழுவதும் போக்குவரத்துதுறை நிர்வாக குறைபாடு இதற்கு துறை அமைச்சர் தான் பொறுப்பேற்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்க மாட்டார்கள் காரணம் கையூட்டு கொடுத்து தானே இந்த பதவிக்கு வந்திருப்பார்கள். 2025 ல் நடந்த குற்ற செயல்களின் அறிக்கை ஒன்றை பொதுவெளியில் தாக்கல் செய்யவும். மக்கள் தெரிந்து கொள்ளட்டும் அரசின் ஆளுமையை. கேவலம்.


VENKATASUBRAMANIAN
டிச 27, 2025 08:17

மக்களின் உயிருடன் விளையாடுகிறார்கள். பணம் சம்பாதிப்பதே குறி. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டு போட்டவர்கள் சிந்திக்க வேண்டும்


jkrish
டிச 27, 2025 08:17

பாபுக்களின் திறமையும் பிரபுக்களின் ஆசிர்வாதத்தில் மற்றுமொரு காவியம் தமிழக போக்குவரத்து துறை.


Kasimani Baskaran
டிச 27, 2025 06:47

திராவிடத்தொழில் சிறப்பாக நடப்பதற்கு இதுவே ஒரு அத்தாட்சி.


தமிழன் மணி
டிச 27, 2025 04:24

இதெல்லாம் வெறும் கண்துடைப்பு வெறும் அம்பை கைது செய்வது கோழைத்தனம் பேருந்து டெப்போக்களில் பேருந்தின் சிறிய ஸ்குரூ வரை எல்லாவற்றிலும் கமிஷன்தான். புதிய பேருந்து ரூட்டில் ஒடிய ஒரே வாரத்தில், 7 டயர்கள் டிஸ்க்குடன், பம்ப், வைப்பர் மோட்டார், கியர் பாக்ஸ் என எல்லாவற்றையும் புதியதை கழட்டி விட்டு பழையதை மாட்டி வாடுகிறானுகள் இது காலம் காலமாக 2 திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியிலும் தொன்று தொட்டு நடந்து வருகிறது இந்த புதிய உதிரி பாகங்களை செகண்ட் ஹாண்ட் மார்க்கெட்டில் வாங்குவதற்கென்றே புரோக்கர்கள் உள்ளார்கள்


சூர்யா
டிச 27, 2025 08:27

அண்மையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் சாவு. ஒரு பஸ்ஸின் பிரேக் ஒழுங்காக பிடிக்கவில்லை என்கிறார்கள்.இந்த வாரம் தொழுதூர் அரசு பேருந்து டயர் வெடித்ததில் தறி கெட்டு பஸ் ஓடியதில் எந்தத் தவறும் செய்யாமல் ஒழுங்காக தன் பாதையில் வந்த கார் மீது மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே சாவு. இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அரசு? எதில் வேண்டுமானாலும் கொள்ளை அடியுங்கள்? கமிஷன் வாங்குங்கள்? அரசு பேருந்து மோட்டாரில் தரமில்லாத டயர்களை பொருத்தி , உதிரி பாகங்களில் கமிஷன் வாங்கி கனவுகளோடும், கற்பனைகளோடும் வாழும் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பழி எடுக்காதீர்கள்? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இறந்தவர்கள் அவர்கள் குடும்பத்தினர் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்க மாட்டார்கள் .அவர்களது பாவம்,சாபம் சம்மந்தப் பட்டவர்களை சும்மா விடாது!


ரவி
டிச 27, 2025 09:42

எந்தத் தனியார் பேருந்துகளிலும் பிரேக் பிடிக்காமல், டயர் வெடித்து பெரும்பாலும் விபத்து நடக்காது. பஸ்சின் பராமரிப்பு நன்றாக இருக்கும். தனியார் பேருந்துகள் பெரும்பாலும் விபத்துக்குள்ளாவது கலெக்சனுக்காக ஓவர் ஸ்பீடு, தாறுமாறாக முந்திச் செல்லுதல், டிரைவர் கண் அயர்தல் போன்றவைகளால்தான் நடக்கும்.அரசுப் பேருந்துகள் இதற்கு நேர் எதிர். பராமரிப்பு இருக்காது, போலி உதிரி பாகங்கள், கிலோ மீட்டரை தாண்டிய டயர்கள், டிரைவர்கள் காலிப் பணி இடத்தால் ஒரே டிரைவரையே இரண்டு ஷிப்டுகள் செய்யச் சொல்வது இவைகள்தான் காரணமாக இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை