உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியாருக்காக நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்

தனியாருக்காக நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்

''இப்படி செஞ்சா போக்குவரத்து துறை ஏன் நஷ்டத்துல போவாது...'' என்றபடியே, சூடாக வந்த டீயை குடித்தார் அண்ணாச்சி.''அப்படி என்ன செஞ்சாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பெரம்பலுார் - திருச்சி, பெரம்பலுார் - கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் - வெள்ளுவாடி, பெரம்பலுார் - வீரகனுார் வழித்தடங்களில், அரசு பஸ் போக்குவரத்து குறைஞ்சிட்டு...''டிரைவர் - கண்டக்டர்பற்றாக்குறையால பஸ்களை குறைச்சிட்டதா சொல்லுதாவ... பின்னணி என்னன்னா, திருச்சி முக்கிய புள்ளியின் உறவுக்காரர் ஒருத்தரு, இந்த வழித்தடங்களில் தனியார் பஸ்களை இயக்குதாரு வே...''இவரும், இன்னும் சில தனியார் பஸ் ஓனருங்களும் சேர்ந்து கொடுத்த அழுத்தத்தால தான், அரசு பஸ் எண்ணிக்கையை குறைச்சிட்டாவளாம்... இதுக்காக, 'வெயிட்'டான கவனிப்பும் நடந்துருக்கு...''அது மட்டுமில்லாம, பெரம்பலுார் டிப்போவுல வரவு - செலவு கணக்குலயும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்குன்னும் சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

raja
பிப் 10, 2024 07:17

இருபத்தி மூனாம் புலிகேசி ஆட்சியில் இப்படி நடக்கவில்லை


Svs Yaadum oore
பிப் 10, 2024 06:46

திருச்சி முக்கிய புள்ளியின் உறவினருக்கு இந்த வழித்தடமாம் ....கிளம்பாக்கம் பேருந்து நிலையமும் தனியாருக்கு ...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ