உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு

கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு

சென்னை:திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்ய விண்ணப்பிக்குமாறு, கழிவு மேலாண்மை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்த, 'துாய்மை இயக்கம்' என்ற மாநில அளவிலான அமைப்பை, தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தில் உருவாக்கப்படும் திட்டங்களை திறம்பட செயல்படுத்த, சி.டி.சி.எல்., எனப்படும் 'துாய்மை தமிழ்நாடு' நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது. கழிவு மேலாண்மையில் பங்கெடுக்க, கழிவுப்பொருட்களை சேகரிக்கும் நிறுவனங்கள், கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து, சி.டி.சி.எல்., விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதன் வாயிலாக, சி.டி.சி.எல்., அறிவியல்பூர்வமாக தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி, கழிவுகளை மறுசுழற்சி செய்தல், கழிவுகளை அகற்றுவதையும் உறுதி செய்யக் கூடிய ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முயற்சி செய்கிறது. கழிவு சேகரிப்பில், முறைசாரா மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பை வலுப்படுத்தி அங்கீகரிக்கிறது. தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், https://thooimaimission.com/partnerships என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களாக கருதப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ