உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த..தடை!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த..தடை!

மதுரை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக தாக்கலான வழக்கில், 'மார்ச் 24 வரை எவ்வித போராட்டத்திலும் ஜாக்டோ - ஜியோ ஈடுபடக்கூடாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் இன்று மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fq2ygqzj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:

பல்வேறு கோரிக்கைகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், மாநிலம் முழுதும் வேலை நிறுத்தம், சாலை மறியலில் இன்று ஈடுபட உள்ளனர். கோரிக்கைகளை ஏற்கும்படி, அரசுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. நான் அரசை ஆதரிக்கவில்லை. அதேநேரத்தில், ஜாக்டோ - ஜியோவை ஊக்குவிக்கவும் இல்லை.வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளன. அதை மீறி, ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதம்.இவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும், அது அவர்களுக்கும், அரசிற்கும் இடையிலான பிரச்னை. சாலை மறியல் நடந்தால் போக்குவரத்து பாதிக்கும்; பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பிற வேலைகளுக்கு செல்வோர் பாதிப்படைவர். மறியலில் ஈடுபடுபவர்களை கைது செய்து, திருமண மண்டபங்களில் போலீசார் தங்க வைப்பர். அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதி செய்ய வேண்டும். இதனால், அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது.

நிரந்தர பணி நீக்கம்

வேலை நிறுத்தமானது, தமிழக அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளுக்கு எதிரானது. வேலை நிறுத்தம் செய்ய சட்டரீதியாக உரிமை இல்லை. அரசு ஊழியர்கள் யாரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. மக்கள் நலன் கருதி ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, போலீசார் வழக்கு பதிய வேண்டும். அவர்களை, தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.விசாரணை நடத்தி நிரந்தர பணி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு வாதம்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளிடம், நான்கு அமைச்சர்கள் இடம்பெற்ற குழு பேச்சு நடத்துகிறது. மார்ச் 24 வரை அவகாசம் தேவை.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஜாக்டோ - ஜியோ சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என, உயர் நீதிமன்றம் 2018 டிசம்பரில் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த அமைப்பு, மார்ச் 24 வரை எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது. தமிழக தலைமை செயலர், வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர், பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறை முதன்மை செயலர்கள், மனிதவள மேலாண்மை துறை செயலர் மற்றும் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். விசாரணை, மார்ச் 24க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Murugesan
பிப் 25, 2025 23:09

அயோக்கிய திமுக கொத்தடிமைகள் வாங்குகிற சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்யுங்க ,அயோக்கிய திமுகவிற்கு ஓட்டு கேட்டவர்கள் நாடகமாடுகின்றனர்.


aaruthirumalai
பிப் 25, 2025 13:31

இப்ப அம்மா இருந்திருந்தா எப்படி இருக்கும்.


Karthik
பிப் 25, 2025 16:41

ஜெ இருந்திருந்தால்.. ரெண்டு இட்லி + சாம்பார் = 20 கோடி, ஒரு தோசை + சட்னி சாம்பார்= 50 கோடி, ஒரு பொங்கல் 100 கோடி ரூபாய்க்கும் குறையாமல் விற்பனையாகிருக்கும். ஜெ இறந்துவிட்டதால் இந்த விலைப்பட்டியலை காண வாய்ப்பின்றி போனது நமக்கு..


Karthik
பிப் 25, 2025 16:49

ஜெ இருந்திருந்தால்... சுமார் ஏழு ஏழு தலைமுறைக்கு பிந்தைய விலையான ரெண்டு இட்லி + சாம்பார் 20 கோடி, ஒரு தோசை+ சட்னி சாம்பார் 50 கோடி, ஒரு பொங்கல் 100 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இந்நேரம் விற்பனையாகிருக்கும். ஜெ இறந்துவிட்டதால் இந்த விலைப்பட்டியலை காண வாய்ப்பின்றி போனது நமக்கு..


Subburamu Krishnasamy
பிப் 25, 2025 12:38

In many places ruling political netas are treating the government staff as slaves and bonded labourers. But at the same time, for such ill treatments, government officials themselves are responsible. Most of the officials are highly corrupt and they have no other go to surrender their dignity to political bosses. This situation is causing worst environment in government services to the straight forward officials


Haja Kuthubdeen
பிப் 25, 2025 12:26

எதிர் கட்சியாக திமுக இருந்தபோது ஜாக்டோ ஜியோவிற்கு எப்படி எல்லாம் ஆதரவா தூபமிட்டது???


Karthik
பிப் 25, 2025 16:17

அது வேற வாய்.. இது நாறா வாய்_ங்கோ.


G Mahalingam
பிப் 25, 2025 11:49

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்ற முடியாமல் அவருக்கு அரசுக்கு உயர் நீதிமன்றம் என்ன தண்டனை. அதை உயர்நீதிமன்றம் சொல்ல வேண்டும்.


K B Janarthanan
பிப் 25, 2025 11:08

நீதி துறை மற்றும் காவல் துறை தவிர்த்து மற்ற துறை பணிகளை தனியாரிடம் ஒப்படைத்து மாவட்டாட்சியர்களை கொண்டு கண்காணிக்கலாம். அரசுக்கு செலவினம் குறைவதோடு மக்களுக்கு எவ்வித தடையும்யின்றி பணி விரைவில் முடியும்.பொது மக்களிடம் கருத்து கேட்டும் முடிவு செய்யலாம்.


Rajarajan
பிப் 25, 2025 09:41

சரிப்பா, தனியாரில் மாத சம்பளம் வாங்கும் எங்களைப் போன்றோருக்கு தான் வசதியும் இல்லை, சட்ட நுணுக்கமும் தெரியவில்லை. எந்த அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது, அவை தேவையா என்று சட்ட போராட்டம் நடத்த வக்கில்லை. ஒப்புக்கொள்கிறோம். ஆனால், தமிழக நலனில் அக்கறையுள்ள மாற்று கட்சிகள் மற்றும் பொதுநல சங்கங்களுக்கு கூடவா இதில் அக்கறை மற்றும் விருப்பம் இல்லை ?? மொதல்ல இழுத்து மூடுங்கப்பா உங்க கட்சியையும், பொதுநல அலுவலகத்தையும்.


Varadarajan Nagarajan
பிப் 25, 2025 09:33

அரசு ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டாம், லஞ்சம் வாங்காமல், பொதுமக்களை அலைக்கழிக்காமல் அவர்களுது பணியை ஒழுங்காக செய்யச்சொல்லி மேலும் ஒரு உத்தரவும் போடுங்க எசமான் மவராசனா இருப்பீங்க


RAMAKRISHNAN NATESAN
பிப் 25, 2025 09:31

ஜெ ஜெ இவர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார் ..... அவர் ஊழல்வாதியாக இருக்கலாம் .... ஆனால் தேசவிரோதியாக இருந்ததில்லை ....


RAMAKRISHNAN NATESAN
பிப் 25, 2025 09:15

தனியார் நிறுவனங்களில் மூச்ச் ....... உழைத்தும் ஏன் இன்க்ரிமெண்ட் குறைந்தது என்று கேள்விகூட கேட்க முடியாது ...... கம்யூனிச நாடுகளில் கூட இதுதான் நிலைமை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ....


புதிய வீடியோ