உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள்

அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: தமிழக அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள். அவர்களுக்கு சில கட்டளைகள் வரும்போது, அவற்றை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை வருகிறது. எப்படிப்பட்ட கட்டளைகள் தேர்தல் கமிஷன் வாயிலாக சொல்லப்பட்டது என தெரியாது. தவறான விஷயங்களை சொல்லி விட்டால், அதிலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் வாயிலாக சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். பீஹாரில் இது போன்று தான் நடந்தது. தமிழகத்தில், வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்ப்போரின் எண்ணிக்கை லட்சத்திலிருந்து கோடியாக அதிகரித்துள்ளது. அவர்களுக்கு இங்கு ஓட்டளிக்க வாய்ப்பளிக்கும் போது, வடமாநில சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஓட்டளிக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழக நிலவரம் தெரியாதவர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது என்பதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Balaji
அக் 30, 2025 21:58

அமைச்சரின் பேச்சு கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளது.


N S
அக் 30, 2025 18:16

உண்மைதான். தமிழக அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள். அவர்களுக்கு மந்திரிகள், வட்டம், மாவட்டம், கோட்டம், கட்சி உடன்பிறப்புகள், என சிலரிடம் இருந்து சில கட்டளைகள் வரும்போது, அவற்றை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை வருகிறது.


Jothi Markandan
அக் 30, 2025 21:05

யாம் அரிந்த மொழி தமிழ் இனிமைவாய்மை வாரட்டும் வாழ்க தமிழ்


panneer selvam
அக் 30, 2025 17:22

A great discovery of minister Ragupathy . If government employs pays bribe of 25 lakhs for his job , then how he is going to recover that amount ? Return on Investment is a basic finance term applicable in our life .


sabitharaja
அக் 30, 2025 13:11

அப்படி என்றால் மாநில லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்பவர் எல்லாம் வெளி மாநிலத்தை சார்ந்தவர்களா? மிஸ்டர் மினிஸ்டர்


Rajkumar Chandrasekaran (G24AI2078)
அக் 30, 2025 13:02

MR Minister no body will agree your comments.


SENTHIL NATHAN
அக் 30, 2025 11:53

இது எதிர் காலத்தில் மிகவும் ஆபத்து ஏற்படும்


Natchimuthu Chithiraisamy
அக் 30, 2025 10:48

அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள் அரசை நடத்துபர்கள் நேர்மையற்றவர்கள் என்பதை ஏன் ஸ்டாலினிடம் சொல்லுகிறீர்கள் அவர் அதிமுகவிலிருந்து வந்தவர்க்கு வாழ்வு கொடுத்தவர் என்பதை ஏன் மறந்தீர்கள்.


Dhamodharan S
அக் 30, 2025 10:35

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்ங்குற மாதிரி இருக்கு


sundarsvpr
அக் 30, 2025 10:25

அரசு ஊழியர்கள் அரசு பணிக்கு வருவதற்கு முன் உண்மையானவர்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசு பணியிலும் நேர்மையாய் இருந்தனர். திராவிட கட்சிகள் எம் ஜி ஆர் ஜெயலலிதா தவிர அரியணை ஏறிய பிறகு அரசு ஊழியர்கள் ஒழிங்கீனம் செய்தார் என்று கூறமுடியாது. அரசியல்வாதிகள் ஊழலுக்கு உறுதுணையாய் இருந்தார்கள். இதனால் அரசு ஊழியர்கள் குடும்பம் வெளி தொந்தரவு இல்லாமல் வாழ்ந்தனர்.


S.V.Srinivasan
அக் 30, 2025 10:02

கொஞ்சம் நம்பும்படியா பேசுங்க மந்திரி அவர்களே. மக்கள் காதுல POO சுற்ற வேண்டாம். 65 வருஷமா திராவிட மாலின் லட்சணத்தை பார்த்து கொண்டிருக்கிறோம் .


புதிய வீடியோ