உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசுக்கு நிதி தட்டுப்பாடு: அமைச்சர் வெளிப்படை

அரசுக்கு நிதி தட்டுப்பாடு: அமைச்சர் வெளிப்படை

சென்னை: ''நிதி நிலைமை எப்போது சரியாகிறதோ, அப்போது, அறிவித்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவோம்,'' என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - கே.பி.முனுசாமி: தற்போதைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், நிதி அமைச்சராக இருந்த போது, ஓசூர் மாநகரில், 'ஹைடெக் சிட்டி' அமைக்கப்படும் என்று அறிவித்தார்; ஆனால், செயல்படுத்தவில்லை. வேப்பனஹள்ளி தொகுதியில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்க, அரசு முன் வர வேண்டும். சென்னை மட்டுமின்றி ஓசூர், சூலகிரியில் துணை தகவல் தொழில்நுட்ப மையங்களை உருவாக்க வேண்டும். அரசு கேபிள், 'டிவி' என்பது நல்ல வருவாய் வந்து கொண்டிருந்த துறை. அதன் தற்போதைய நிலை என்ன என்பதை, அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.அமைச்சர் தியாகராஜன்: ஏற்கனவே அறிவித்த திட்டம் என்னவானது என்று கேட்கிறீர்கள். காலம் மாற, மாற, சில சூழ்நிலைகளும் மாறும். நீர்வளத்துறை அமைச்சர் என்னிடம், நிதி பெறுவது எவ்வளவு கஷ்டம் என, இப்போது தெரிகிறதா என்று ஒரு முறை கேட்டார்.நீர்வளத்துறைக்கு அப்போது, 10,000 கோடி ரூபாய் அளவிற்கு, மானிய கோரிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார். இன்றைக்கும் அதே அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்ப துறைக்கு அன்று, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இன்றைக்கு, 130 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.அப்போது, துறைக்கு வரவேண்டிய நிதி, தடையின்றி வந்து கொண்டிருந்தது. இன்று அரசுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைவிட தகவல் தொழில்நுட்ப துறைக்கு அதிக நிதி தட்டுப்பாடு உள்ளது. துறையின் நிதி, 300 கோடி ரூபாய்க்கு மேல், அரசிற்கு திரும்ப பெறப்பட்டுள்ளது. சில நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்க வேண்டிய நிதியும் வந்து சேரவில்லை. இது ஏற்கனவே அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடையாக உள்ளது. எப்போது நிதி நிலைமை சரியாகிறதோ, அப்போது, அறிவித்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவோம். அரசு கேபிள், 'டிவி' நல்ல முறையில் செயல்படுகிறது. புதிதாக டெண்டர் விடப்பட்டு 'எச்.டி., பாக்ஸ்' பொருத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kumar Kumzi
மார் 26, 2025 09:41

உன் திருட்டு திராவிஷ திமுக ஆட்சியில் கட்டிங் கமிஷன் துறைக்கு மட்டும் தானேநிதி ஒதுக்கப்படுகிறது


GMM
மார் 26, 2025 09:33

அரசு என்றால் படை பலம், நிதி பலம் இருக்க வேண்டும். படை, கப்பல், விமானம், ரயில் போன்ற பெரும் செலவு இல்லை. உபரி செலவுகள் மட்டும். காங்கிரஸ் மொழி வாரி மாநிலம் அமைத்த நோக்கம் நாட்டில் நிதி சிக்கல் ஏற்படுத்த தான் உதவுகிறது. தமிழக நிர்வாகம் பத்திரம் பதிவு வருவாய், கடுமையான வரி, இயற்கை வள கொள்ளை, டாஸ்மாக் போதை பொருள் வருமானம், தேவைக்கு அதிக கடன் இருந்தும் நிதி தட்டுப்பாடு என்றால், எப்படி நம்புவது. ?


Yes your honor
மார் 26, 2025 08:58

இவர் மெத்தப் படித்தவர். எப்படி ஒரு கூச்ச நாச்சமின்றி, ஊழலில் பிஹெச்.டி செய்யும் திமுக மந்திரியாக உள்ளார்? இவருடன் மந்திரி சபையில் இருப்பவர்கள் யார் யார் என்று பாருங்களேன், சேகர் பாபு, மனோ தங்கராஜ், உதயநிதி. எப்படி இவர் இந்த மாதிரியானவர்களை தனக்கு சமமாக ஏற்றுக்கொண்டு மந்திரிசபையில் உள்ளார். இவர் படித்த படிப்பு வேஸ்ட்.


G Mahalingam
மார் 26, 2025 08:07

திருப்பூருக்கு கடல் வந்தாலும் வரும் ஆனால் திமுக ஆட்சி இருக்கும் வரை நிதி நிலைமை சரியாக வாய்ப்பே இல்லை. முதலில் கடன் வாங்குவதை நிறுத்தினால் புண்ணியமா போகும். 50 சதவீதம் வரி பணத்தை கொள்ளை அடித்தால் எப்படி நிதி நிலைமை சரியாகும்.


Sriramaprasad Balachandran
மார் 26, 2025 06:42

Namaskar, As per Income Tax Act an Indian Citizen can hold his income in cash. From April 11 2016 our government introduced UPI payment and Year-on-Year the transaction in terms of Quantity and Volume increases. Demonetization and CORONA made our Citizens to do their transactions thru Digital rather than cash. Most Indians are their bank account, which makes the digital payment successful in India. Can our government put a CAP on holding Cash by individual as well as corporates? Provide a timeline for the citizen and the corporate to deposit their cash into their bank account. After the said date - Income Tax, central government Officer team will do an audit of revenue, RTO, Police, who ever dealing finance transaction in government enterprises, MP, MLA, lavish spenders houses and ensure that the money is deposited in their bank account. Which may lead to reduce corruption.


RAMKUMAR
மார் 26, 2025 06:18

கோபால், என்ன கோபால் இப்படி சொல்லிடீங்க, அந்த 4 லட்சம் கோடி பட்ஜெட் எல்லாம் போடீங்களே கோபால்....அது எல்லாம் நாடகமா கோபால் ???


கோமாளி
மார் 26, 2025 06:12

தமிழ்நாட்டின் நிதிநிலையை ஒரு குடும்பத் தலைவனோடு ஒப்பிட்டால் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை நிலை தான்


D.Ambujavalli
மார் 26, 2025 05:51

30000 கோடி அடித்த கதையை சொல்லப்போய்தான் அன்று நிதித் துறையிலிருந்து தூக்கப்பட்டார் பாவம் சுற்றி வளைத்து துறைக்கு நிதி வரவு குறைக்கப்படுவதை மட்டும் கோடி காட்டிவிட்டார்


Nandakumar Naidu.
மார் 26, 2025 05:50

இந்த நிதி பற்றாக்குறை திராவிட கட்சிகள் உயிருள்ள வறை நிறைவேறாது. தமிழகத்தின் மக்கள் மேல் கடன் சுமை அதிகமாகிக் கொண்டே போகும். இதில் சந்தேகமில்லை.


கிஜன்
மார் 26, 2025 05:22

நீங்கள் அமைச்சராக இருக்கும்போதே .... ஓசூர் தொழில்நுட்ப துறையில் வளரவில்லையெனில் .... வேறு யாரை நம்புவது ...


சமீபத்திய செய்தி