உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலைஞர் பல்கலை மசோதா கவர்னரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கு

கலைஞர் பல்கலை மசோதா கவர்னரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:கும்பகோணம் கலைஞர் பல்கலை சட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் ரவியின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலையை பிரித்து, புதிதாக கும்பகோணத்தில் கலைஞர் பல்கலையை உருவாக்குவதற்கான சட்ட மசோதா, கடந்த ஏப்ரல், 29ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m0pb906o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மசோதாவில், 'கலைஞர் பல்கலை வேந்தராக தமிழக முதல்வரும், இணை வேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சரும் இருப்பர். வேந்தரின் முன் அனுமதியின்றி பட்டங்கள் வழங்க முடியாது. தேடல் குழு தேர்வு செய்யும் மூவர் பட்டியலில் இருந்து துணை வேந்தரை, வேந்தர் நியமிப்பார்' என்று கூறப்பட்டிருந்தது. 'துணை வேந்தர் தேடல் குழுவில், வேந்தரின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மை செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலை துணை வேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர்' என்றும், மசோதாவில் கூறப்பட்டிருந்தது. கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட இந்த மசோதாவை, கடந்த ஆகஸ்ட், 5ம் தேதி, ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர் ரவி. இந்நிலையில், கவர்னரின் முடிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், 'கலைஞர் பல்கலை சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது, சட்டசபை முடிவுக்கு எதிரானது. எனவே, இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகும் தமிழக அரசு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை, கவர்னர் ரவி நிலுவையில் வைத்திருப்பதற்கு எதிராக, தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதை, கடந்த ஏப்ரல் 8ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, கவர்னரால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள, 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியது. இதுதொடர்பாக, ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கலைஞர் பல்கலை மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னரின் முடிவை எதிர்த்து, தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sun
அக் 05, 2025 21:41

வலியப் போய் தானாகவே தலையை கொடுக்கிறது தமிழக அரசு. இந்த முறை தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வருவது ரொம்ப கஷ்டம்!


Kulandai kannan
அக் 05, 2025 19:59

அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால், முதல் கடமை அனைத்து கட்டுமரம் பெயர்களையும் நீக்க வேண்டும்.


ஆரூர் ரங்
அக் 05, 2025 10:21

இதுக்கு உச்ச கோர்ட் அழுத்தம் தேவையா?.


சத்யநாராயணன்
அக் 05, 2025 10:11

உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் விலைப்பட்டியல் திமுகவிற்கு அத்துபடி அதில் எவ்வளவு இருந்தாலும் இவர்கள் கொடுப்பதற்கு தயாராகி விட்டார்கள் என்ன பயமா அவர்களுக்கு திமுக நினைப்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பாக எழுதி வாங்கிக் கொள்வார்கள் இந்த நிலை இப்படியே நீடிக்கும் ஆனால் இந்தியாவின் மிகக் கேடுகெட்ட மாநிலமாக தமிழகம் தலை குனிந்து நிற்பது உறுதி


V Venkatachalam
அக் 05, 2025 12:12

எதிர்ப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்.


Anantharaman
அக் 05, 2025 08:53

இனியும் தமிழ்நாடு சட்டசபையைக் கலைக்காவிட்டால்...


Oviya Vijay
அக் 05, 2025 07:24

தேவையா இது...


Sivaram
அக் 05, 2025 06:50

அது எங்க அப்பாவோட அப்பா பெயரிலே பல்கலை கழகம் திராவிடியா மாடல் எப்படி பிரச்னை பண்ணலாம் , நாங்க உச்ச நீதி மன்றம் செல்ல தமிழன் ஆணை இட்டுவிட்டான்


பாரதன்
அக் 05, 2025 06:48

தேச விரோத திராவிட திருடர்களின் ஆட்சியில் இயற்றப் படும் மசோதா மற்றும் திட்டங்கள் அனைத்தும் நாட்டுக்கு எதிரானவை உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு திராவிட கும்பலின் ஆட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லை என்றால் பிரிவினை வாதம் ஆட்டம் போடும்


vivek
அக் 05, 2025 05:51

திமுக மீண்டும் கொட்டு வாங்க போகிறது என்று இந்த பிரியமான வடைக்கு தெரியுமா


Priyan Vadanad
அக் 05, 2025 01:38

இவரை சமாளிப்பதே அரசுக்கு பெரும் வேலையாக இருக்கும்போல தெரிகிறது. அரசோடு ஒத்துப்போகாத ஒருவரை ஏன்தான் இத்தனை நாள் பொறுப்பில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கவர்னர்களை மாற்றினால்தான் என்ன? குழப்பம் இல்லாமல் அரசு செயல்படமுடியுமே


குடிகாரன்
அக் 05, 2025 06:47

தேச விரோத திராவிட திருடர்களின் ஆட்சியில் இயற்றப் படும் மசோதா மற்றும் திட்டங்கள் அனைத்தும் நாட்டுக்கு எதிரானவை உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு திராவிட கும்பலின் ஆட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி