உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மருத்துவமனை டாக்டருக்கு கத்திக்குத்து: ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி

அரசு மருத்துவமனை டாக்டருக்கு கத்திக்குத்து: ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை மருத்துவராக பணியாற்றும் டாக்டர் ரமேஷ்பாபுவை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை டாக்டராக பணியாற்றுபவர் ரமேஷ் பாபு 50, இவர் இன்று (ஜூலை 07) இரவு 9:00 மணிக்கு சின்ன கடை பஜாரில் உள்ள தனது சொந்த கிளினிக்கை மூடிவிட்டு வெளியில் வரும்போது மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் ரமேஷ் பாபுவை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில் அவரது இடது பக்க வயிறு, தொடை, முதுகு உட்பட 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் காளிராஜ் தலைமையிலான டாக்டர்கள் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான போலீஸ் குழுவினர் விசாரித்தனர்.கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டி கணேசனை என்பவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 08, 2025 12:18

அதெப்படீங்க, அரசு மருத்துவர்னு சொல்றீங்க, காலைல 9 மணிக்கு சொந்த கிளீனிக்கை மூடிட்டு வந்தாருன்னு சொல்றீங்க. ஆஸ்பத்திரியில 8 மணிக்கு புற நோயாளிகளை பார்க்க வேண்டாமா


ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 15:27

மாலையில் பணி முடிந்தபின் தனி கிளினிக் வைத்து மருத்துவம் செய்ய அரசு விதிகளில் இடமுள்ளது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 08, 2025 18:24

செய்தியை சரியாக படியுங்கள் நண்பரே. அவரை குத்தியது காலையில் 9 மணிக்கு


jss
ஜூலை 08, 2025 09:05

திராவிடமாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்ப்பீ. இதை பெரிது படுத்துகுறீர்களே. உயிர் தப்பியதற்க்கு நன்றி கூறுங்கள் ஒரு பழைய பாட்டு ஞாபகம் வருது " அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு, இப்ப ரொம்ப கெட்டு போச்சுண்ணே"


Kasimani Baskaran
ஜூலை 08, 2025 04:01

குற்றம் செய்தால் ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கையில் இது போல சித்து வேலை செய்யும் கேடுகளை மாறுகால் மாறுகை வாங்கவேண்டும்.


nagendhiran
ஜூலை 07, 2025 23:16

நடந்தது எடப்பாடி ஆட்சினா? ஆக எடப்பாடி பதவி விளகனும்னு கூவியிருப்போம்? நடந்தது விடியல் ஆட்சில? நவதுவாரத்தையும் பொத்திட்டு பாஜக ஒழிகனு சொன்னா போதும்? அனைத்தையும் மறக்கவைத்திடலாம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை