அண்ணா பதக்கம் விண்ணப்பிக்க அரசு அழைப்பு
சென்னை:தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கும் மூன்று பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இதில், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும்.தகுதியானவர்கள், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், டிசம்பர், 15க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு, குடியரசு தின விழாவில் பதக்கங்களை முதல்வர் வழங்குவார்.