உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேழ்வரகு கொள்முதல் துவக்கியது தமிழக அரசு

கேழ்வரகு கொள்முதல் துவக்கியது தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மக்களுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க, ரேஷன் கடைகள் வாயிலாக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை வினியோகம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இத்திட்டம், சோதனை முயற்சியாக, நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கிடையில், மத்திய அரசும், ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினருக்கான உணவு பட்டியலில், சிறு தானிய வகைகளையும் சேர்த்துள்ளது. எனவே, தமிழக விவசாயிகளிடம் இருந்து நடப்பு சீசனில், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்து தருவதற்கு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, இந்திய உணவு கழகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக, 100 கிலோ எடை உடைய குவிண்டால் கேழ்வரகுக்கு, 3,846 ரூபாய் வழங்கப்படுகிறது.டிசம்பரில் துவங்கி அடுத்த மாதத்திற்குள் கேழ்வரகு கொள்முதலை முடிக்க வேண்டும். எனவே, நுகர்பொருள் வாணிப கழகம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து, தற்போது கேழ்வரகு கொள்முதல் செய்யும் பணியை துவக்கியுள்ளது.நேற்று முன்தினம் வரை, 24 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு முழுதும் கேழ்வரகு கொள்முதலுக்கு தமிழகம் அனுமதி கோரியிருந்தது. இதுவரை, அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை