உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலைகளுக்கு ஜாதி பெயர் மாற்றும் அரசாணை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

சாலைகளுக்கு ஜாதி பெயர் மாற்றும் அரசாணை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: சாலை களில் ஜாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால உத்தரவிட்டது.தீண்டாமைக்கான வசை சொல்லாக, 'காலனி' என்ற சொல் இருப்பதால், அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படவுள்ளது. அத்துடன், சாலைகள், தெருக்கள் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களும் நீக்கப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், கிராமங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: * முதற்கட்ட கள ஆய்வு பணியை மேற்கொள்ளலாம். ஜாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக கருத்து கேட்பு, ஆய்வுகள் நடத்த வேண்டும். * அடுத்த கட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ellar
அக் 18, 2025 18:55

கருத்தூன்றி கவனித்தால் பல காலம் ஒரே பெயரை வைத்திருந்தது கிட்டத்தட்ட ஜாதி என உருமாறிவிட்டது அவ்வாறு பார்த்தால் காந்தி என்பதும் நிதி என்பதும் கூட ஜாதி பெயருக்கு சமமான முக்கியத்துவம் பெற்றுவிட்டது எனவே தமிழகத்தில் இவைகளையும் நீக்க முடியுமா


தமிழன்
அக் 17, 2025 19:56

சாதி ஒழிப்பு எல்லாம் நோக்கம் கிடையாது அனைத்து கிராமங்களின் பெயர்களிலும் கருணாநிதி கலைஞர் போன்ற பெயர்களை திணிக்க வேண்டும் அதுதான் நோக்கம். இதுவரை திமுக அரசு வைத்துள்ள பெயர்கள் அனைத்தும் 80 சதவீதம் கருணாநிதி பெயரும் 20% பெரியார் அண்ணா பெயர்களும் வைக்கப்பட்டு உள்ளது ஒரே ஒரு பெயர் ஜிடி நாயுடு என்று பாலத்திற்கு பெயர் சூட்டி அதற்கு இப்பொழுது நாயுடு சாதிப் பெயர் அல்ல என்று திமுகவினர் கூட்டணி கட்சிகளை வைத்து முட்டுக் கொடுத்துக் கொண்டுள்ளனர். இதற்கு தான் கருணாநிதி பெயரை வைத்திருந்தால் ஒருத்தனும் கேள்வி கேட்க மாட்டான் கேள்வி கேட்டால் அவனை போலீசை வைத்து உள்ளே தூக்கி வைத்து விடலாம்...


Kulandai kannan
அக் 17, 2025 19:11

நாயுடுவுக்கு மட்டும் விதிவிலக்கு


GMM
அக் 17, 2025 18:45

சாலை பொது. ஆனால், பஸ் நிலையம், அரசு அலுவலகம் அமைக்க சிலர் நிலம் கொடுத்து தான் விரும்பும் பெயர் வைத்து இருப்பர். சாதி பெயர் நீக்க முதலில் நிலத்தை திருப்பி கேட்டால் கொடுக்க முடியுமா? அப்பாவு பிள்ளை, ஓசூர். நாடார் பள்ளி சிவகாசி . மேலும் அண்ணா, கருணாநிதி கட்சி தலைவர். எதனையும் கொடுக்கவில்லை. அவர்கள் பெயர் நீக்க வேண்டும். முதலில் சாதி இட ஒதுக்கீடு , சான்று வழங்க தடை செய்ய மசோதா வேண்டும். அப்போது தானே சாதி மறையும். வன்கொடுமை சட்டம் நீக்குக. சாதி , தாலி மனித உரிமை. அதில் திராவிடம் தலையிட முடியாது.


sankaranarayanan
அக் 17, 2025 18:17

கரூரில் நடந்தது ஆணவக்கொலை அல்ல அரசால் அனுப்பட்ட ஆம்புலன்ஸ் கொலை என்றே சொல்லலாமே


sundarsvpr
அக் 17, 2025 18:13

சாதி பெயர் கூடாது என்றால் தனிப்பட்டவர் பெயரும் இடுவது தவறு. எனவே வீதிகளுக்கு தமிழ் எழுத்துக்களை அ வீதி ஆ வீதி க வீதி போன்று வைக்கலாம்


Natchimuthu Chithiraisamy
அக் 17, 2025 16:55

ஜாதி பெயர் என்று சொல்லி அந்த வார்த்தை சொன்ன நினைவு மாறுவதக்குள் நாயுடு மேம்பாலம் என்று பெயர் வைத்து விட்டார் முதல்வர். இது வேறு மாநிலத்தில் உள்ள ஜாதி பெயர் என கருதி இது இங்கு செல்லத்தக்கதல்ல என்று நினைத்தாரோ.


Vasan
அக் 17, 2025 18:42

அந்த அரசாணையை நன்றாக படியுங்கள். அந்த ஆணையானது, சாலை, தெரு, குடியிருப்பு, கிராமம், நீர்நிலை ஆகியவற்றிற்கு மட்டும் தான். மேம்பாலங்கள் அந்த பட்டியலில் இல்லை. எனவே மேம்பாலத்திற்கு ஜாதி பெயர் இருக்கும்படியாக பெயர் வைத்ததில் தவறு ஒன்றுமில்லை.


Natchimuthu Chithiraisamy
அக் 17, 2025 16:49

முதலில் கோபிசெட்டிபாளையம் கவுண்டம் பாளையம் சட்டமன்ற தொகுதி ஜாதி உள்ளது காங்கேயம் முருகன் பெயர் சிவன்மலை சிவன் பெயர் கிருத்துவர்கள் இஸ்லாமியர்கள் வாழும் நாட்டில் மாற்று மத பெயர் அவர்களை வேதனை படுத்தாத. பிற்காலத்தில் ஆப்பிரிக்க மக்களும் இங்கு வந்து வாழ்வார்கள் எனவே போக்குவரத்து கழகம் பெயரை மாற்றியது போல் A, B , க்ஸ்,Y, என்று வரிசையாக மாற்ற உத்தரவு இடுங்கள். அதில் ஆங்கில எழுத்துகள் உள்ளது, தமிழ் எழுத்தை வைத்தால், ஹிந்தி காரன் கோபப்படுவான், மலையாள எழுதும் வேண்டும். முதலில் நீதிபதிகள் பெரியாரை வேளையில் சேரும் போதே சிங்கள் எழுத்தாக மாற்றிவிட வேண்டும் அப்பொழுதுதான் தீர்ப்பு சரியாக சொல்லமுடியும்


ram
அக் 17, 2025 15:54

அப்படியே இந்த ஜாதி ஒதுக்கீடுகளை நீக்க வேண்டியதுதானே இந்த திருட்டு திமுக ஆட்கள்.


ram
அக் 17, 2025 15:48

தமிழுக்கு முக்கியமான நூல்களை காப்பாத்தி கொண்டு வந்த U V Swaminatha Iyer என்பவர் பேரை U V Swaminathan என்று மாத்தி கொண்டும், முத்துராமலிங்க தேவர் அவர்களை முத்துராமலிங்கம் என்று மாத்தி விட்டது இந்த திருட்டு திமுக அரசு. G K Naidu என்று இவர் கட்சியை சார்ந்த நபருக்கு ஜாதியை நீக்கவில்லை ஏன் அவர் உண்மையான பேரில் Gopalsamy Doraisamy என்று அந்த பாலத்திற்கு பெயர் வைக்க வேண்டியதுதானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை