உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முக்கியமான 3 தேவைகளை உடனே நிறைவேற்ற அரசு உத்தரவு

முக்கியமான 3 தேவைகளை உடனே நிறைவேற்ற அரசு உத்தரவு

'ஊராட்சிகளில் வரும் 11ம் தேதி நடக்க உள்ள, கிராம சபை கூட்டத்தில், மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, உடனடியாக நிறைவேற்றக்கூடிய, மூன்று தேவைகளை தேர்வு செய்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு அன்றைய தினம் விஜயதசமி பண்டிகை வந்ததால், கிராம சபை அக்., 2க்கு பதில், 11ம் தேதி நடக்கும் என அறிவிக்கப் பட்டது. அதன்படி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் 11ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் குறித்த விபரங்களை, அரசு அறிவித்துள்ளது. அதன் விபரம்: கிராம சபை கூட்டத்தில், மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதில் நிறைவேற்றக் கூடிய மூன்று தேவைகளை தேர்வு செய்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இழிவுபடும் பொருள் தரும் ஜாதி பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொது சொத்துக்களின் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்து, மாற்றி அரசிதழில் வெளியிட வேண்டும். கிராம ஊராட்சி நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை