வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மறுபடியும் முதல்லேருந்து ஆரம்பிச்சு, சுப்ரிம்கோர்ட்டில் ஒன்றிய அரசு வாதாடி, இந்த தீர்ப்பை உதைச்சு வெளியே தள்ளிடும்.
நல்ல தீர்ப்பு. இதே போல் டாஸ்மாக் மதுவும் கெடுதல் வாய்ந்தது. அதை ஏன் அரசு தடை செய்யவில்லை?
சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அரசு கொண்டு வந்த கட்டுப்பாடுகள் செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழக அரசை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களுக்கு தடை விதித்து, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, கவர்னர் ஒப்புதல் அளித்தார். சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qp0ry3kb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சட்டத்தை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் சார்பில், ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்ந வழக்கில் இன்று (ஜூன் 03) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராஜசேகர் தீர்ப்பு அளித்தனர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அரசு கொண்டு வந்த கட்டுப்பாடுகள் செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கி, நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் நீதிபதிகள், ''மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. விளையாடுபவர்களின் தனிப்பட்ட உரிமை என்றாலும் அது மற்றவர்களை பாதிக்கக் கூடாது'' என கருத்து தெரிவித்தனர்.
மறுபடியும் முதல்லேருந்து ஆரம்பிச்சு, சுப்ரிம்கோர்ட்டில் ஒன்றிய அரசு வாதாடி, இந்த தீர்ப்பை உதைச்சு வெளியே தள்ளிடும்.
நல்ல தீர்ப்பு. இதே போல் டாஸ்மாக் மதுவும் கெடுதல் வாய்ந்தது. அதை ஏன் அரசு தடை செய்யவில்லை?