உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு ஆசிரியர்கள் தடுமாற்றம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு ஆசிரியர்கள் தடுமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'நீட்' தேர்வு விண்ணப்பப் பதிவின் போது அடிக்கடி, 'எரர்' ஏற்படுவதால், ஆசிரியர்களே தடுமாறும் நிலையில், அரசு பள்ளி மாணவ - மாணவியர் நிலை பரிதாபமாக உள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவுத் தேர்வு, தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு, நீட் தேர்வு, மே, 4ல் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த, 7ல் துவங்கியது. மார்ச், 7 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. ஆனால், நடப்பு ஆண்டு விண்ணப்பப் பதிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.ஏ.பி.சி., - ஐ.டி., புகைப்பட பதிவேற்றம், கையொப்பம், கைரேகை பதிவேற்றம் ஆகியவற்றில் பலமுறை, 'எரர்'களாக வருவதால், ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் பல மணி நேரம் போராட வேண்டியுள்ளது.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறியதாவது:

நடப்பாண்டு நீட் விண்ணப்பத்தில், புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. தனியார் பயிற்சி மையங்கள், தனியார் பள்ளிகளில், பள்ளியிலோ, வீட்டிலோ பதிவு செய்கின்றனர். அரசு பள்ளி மாணவர்கள், பள்ளியில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதன் விபரங்கள் குறித்து ஆசிரியர்கள் தெரிவிக்கவில்லை. குறிப்பாக விண்ணப்பம் பதிவு செய்ய ஆசிரியர்களே தடுமாறுகின்றனர்.விண்ணப்பக் கட்டணம் செலுத்தவே தடுமாறும் அரசு பள்ளி மாணவர்கள், 'பிரவுசிங்' சென்டர்களுக்கும், பல நுாறு ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதனால், அனைத்து மாணவர்களுக்கும், பள்ளிகளில் விண்ணப்ப பதிவு செய்து தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ganesan N
பிப் 19, 2025 21:16

தமிழக அரசு ஆசிரியர்களில் 70% போதுமான பொதுஅறிவு அற்றவர்களாகவே உள்ளனர். இதனால்தான் சாதாரண விண்ணப்பத்தினைக்கூட விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அரசு பள்ளி ஆசிரயர்களும் தங்களுடைய தரத்தினை உயர்த்திக் கொள்ள முன் வரவேண்டும்.


ஆரூர் ரங்
பிப் 18, 2025 09:25

இந்த ஆசிரியர்களிடம் கம்பியூட்டர் படித்தால் தரம் எப்படியிருக்கும்? எந்த கொம்பனும் குறை கூற முடியாத ஆட்சி?


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 18, 2025 08:57

கேவலம் ஒரு அப்ப்ளிகேஷனை சரியாக பதிவுசெய்யக்கூட திறமை இல்லாத மாணவர்கள், ஆசிரியர்கள். அந்த லட்சணத்தில் இருக்கிறது அரசு பள்ளிகள். இவர்களின் திறமையின்மையை மறக்க சர்வர் எரர் மீது பழி போடுகின்றனர். தப்புத்தப்பாக டைப் செய்தால் எரர் வரத்தான் வரும். எல்லா விபரங்களையும் ஒழுங்காக முன்னரே தயாராக வைத்துக்கொண்டு முறைப்படி பதிவு செய்யுங்க.


v narayanan
பிப் 18, 2025 04:57

தமிழக அரசு கவனத்தில் கொண்டு இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் .எல்லா மாணவர்களும் விண்ணப்பிக்க வசதி செய்ய வேண்டும் .


முக்கிய வீடியோ