உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கார்டில் இறந்தவர் பெயர் நீக்காததால் அரசுக்கு வீண் செலவு 

ரேஷன் கார்டில் இறந்தவர் பெயர் நீக்காததால் அரசுக்கு வீண் செலவு 

சென்னை:தமிழகத்தில் மாதம் சராசரியாக, 35,000 முதல் 40,000 பேர் வரை, இறக்கும் நிலையில், அவர்களது பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படாததால், அவர்களுக்குரிய பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. இதனால், அரசுக்கு கூடுதல் செலவாகி வருகிறது.தமிழக ரேஷன் கடைகளில், அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, மாதம் அதிகபட்சம், 35 கிலோ அரிசி; முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோ அரிசி, இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னுரிமையற்ற அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதம், 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.ஒரு கார்டில், ஒரே நபர் இருந்தாலும், 12 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இது தவிர, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் பாமாயில், 2 கிலோ சர்க்கரை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு ஆண்டுக்கு, 12,500 கோடி ரூபாய் செலவிடுகிறது. ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர் இறந்து விட்டால், அவரின் இறப்பு சான்றை சமர்ப்பித்து, கார்டில் இருந்து பெயரை நீக்க வேண்டும். பெரும்பாலானோர் இதை செய்யாததால், இறந்தவர்களுக்குரிய பொருட்கள், ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்படுகின்றன.

இது குறித்து, உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் மாதம் சராசரியாக, 35,000 முதல் 40,000 பேர் வரை இறக்கின்றனர். ஒருவர் உயிரிழந்தால், சுகாதாரத் துறை சார்பில், இறப்பு சான்று வழங்கப்படுகிறது. இதை சமர்ப்பித்து, ரேஷன் கார்டில் இருந்து, இறந்தவர் பெயரை, பலர் நீக்குவதில்லை. ரேஷன் திட்டம், 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டு உள்ளது.எனவே, இறந்தவர் பெயரை பதிவு செய்யும் போது, ஆதார் பெறப்படுகிறது. அந்த விபரத்தை உணவுத் துறைக்கு தெரிவிக்கும் வகையில், மென்பொருள் உருவாக்கி, இணைப்பு வசதிகளை, அரசு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால், ஒருவர் உயிரிழந்தது பதிவு செய்யப்பட்டதும், உணவுத் துறை ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கும். அடுத்த மாதத்தில் இருந்து, இறந்தவருக்கு உரிய பொருட்கள் அனுப்புவது நிறுத்தப்படும். இதனால் அரசுக்கு செலவும் குறையும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

உ.பி
ஜூலை 17, 2025 09:02

பஸ் வராத வரதராஜபுரம் பஸ் ஸ்டான்ட்...மக்கள் பணத்த வீணடிச்ச கதை என்ன?


Ashok PB
ஜூலை 17, 2025 08:40

எதற்கு மக்கள் தனியா அப்ளை செய்யணும்.. இதற்கு பதில், இறப்பு சான்றிதழ் கொடுக்கும்போதே, அரசே ஆட்டோமேட்டிக்காக நீக்கிவிடலாமே.


Varadarajan Nagarajan
ஜூலை 17, 2025 06:51

இதுபோல நீங்களாகவே குடும்ப அட்டையில் பெயரை நீக்கிவிட்டால் பிறகு பொங்கல் பரிசு தொகை, மற்றும் உரிமைத்தொகைகளை எப்படி அரசியல்வியாதிகள் ஆட்டயப்போடுவது? நீங்கள் கூறுவது நமக்கு சரிபட்டுவராது. இதுபோல இன்னும் நிறைய அவலங்கள் அரசுத்துறையில் உள்ளது.


Pichai
ஜூலை 17, 2025 06:35

The solution is very simple. All the names included in the family ration card should be linked to AADHAR. At the time of cremation/burial of the dead person providing Aadhar number be made compulsory. Based on this, the deletion in ration card will be automatic through a software. The government should think and avoid blaming


m c mouli
ஜூலை 17, 2025 10:49

what about new person inculted no app no action


புதிய வீடியோ