உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து சமயத்திற்கு எதிராக செயல்படும் அரசு: அர்ஜூன் சம்பத்

ஹிந்து சமயத்திற்கு எதிராக செயல்படும் அரசு: அர்ஜூன் சம்பத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : பிராமணர்கள் பாதுகாப்பு, சனாதன ஹிந்து தர்ம பாதுகாப்பை வலியுறுத்தியும் ஹிந்து சமயத்திற்கு எதிராக செயல்படும் தமிழக அரசை கண்டித்தும் ஜன.,5 மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளதாக ஹிந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர்அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சனாதன தர்மத்தையும் பிராமண சமுதாயத்தினரையும் இழித்தும் பழித்தும் பேசி வருகின்றனர். அதை தடை செய்வதோடு பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும். பி.சி.ஆர்., சட்டத்தில் பிற ஜாதியினர் கேலி செய்தால் உடனடியாக அச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுகின்றனர். அதே நேரத்தில் பிராமணர்களை மடிசார், மாமி, அவாள், இவாள் என்று கேலி செய்வதை யாரும் கண்டுகொள்வதும் இல்லை, நடவடிக்கை எடுப்பதும் இல்லை. டிச.,3ல் சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு நிகழ்ச்சி நடந்த போது அதில் பேசிய கஸ்துாரியின்பேச்சை திரித்து வெளியிட்டதோடு அவரை தீவிரவாதியை போல விரட்டிச்சென்று தமிழக அரசு கைது செய்தது. ஆனால் ஐயப்பனைப் பற்றி தவறாகபாடிய கானா பாடகி இசைவாணியின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.ஈஷா யோகா மையம் தொடர்பாக அவதுாறு பரப்பி வரும் நக்கீரன் கோபாலுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹிந்து மக்கள் கட்சி இளைஞரணி நிர்வாகி ஓம்கார்பாலாஜியை கைது செய்தது தமிழக அரசு. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் தரும் தமிழக அரசு அதே தீவிரவாதத்தை எதிர்த்து பேரணி நடத்தினால் அனுமதி மறுத்து கைது செய்து வழக்கு பதிவு செய்கிறது. தொடர்ந்து ஹிந்து சமயத்திற்கும் தேசத்திற்கும் எதிராக செயல்படுகிறது தமிழக அரசு. மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் 8 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.தமிழக அரசு அனுமதித்திருந்தால் அவர்களுக்கு மானியம் கிடைத்து வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கும். அதே திட்டத்தை ஜாதி ரீதியிலான அணுகுமுறை என்று கைவிட்டு கருணாநிதி கைவினைஞர்கள் திட்டம் என பெயரை மாற்றி செயல்படுத்துகிறது. சனாதனத்தை அழிப்போம் என கூறிக் கொண்டே ஹிந்துகளுக்கு விரோதியில்லை என்கின்றனர். பிராமணர்களையோ ஹிந்து சமயத்தையோ யாராவது இழிவுபடுத்தினால் அரசு கேட்பதில்லை.இதை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் ஜன.,5ல் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும். தென்னிந்திய பார்வர்டு பிளாக், ஹிந்து மக்கள் கட்சி, நாத்திக எதிர்ப்பு முன்னணி இணைந்து நடத்துகின்றன. அனைத்து பிராமணர் சமூகத்தினரும் கலந்து கொள்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

V RAMASWAMY
டிச 27, 2024 12:38

திரு ஐசாக் அவர்களே, இந்து மதம் என்பது தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும், உலகையும் வானத்தையும், சந்திர சூரியர்களையும், இயற்கையையும், பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தையும், ஏன், உங்களையும் கடவுளாகத்தான் காணும். அது தான் சந்தானத்தின் வெற்றி. இறையிலிருந்து உருவாக்கி இறையிலேயே கலக்கும் எல்லாம் இறை சக்தியின் அம்சங்களே. உங்கள் மாதத்தில் ஏசு, மேரி மாதா, செயின்ட் பிரான்சிஸ், போப், சர்ச் பாதிரியார்கள் இவர்களையெல்லாம் கடவுள் அம்சங்களாக நீங்கள் பார்ப்பதில்லையா? பரந்த மனப்பான்மையுடன் இருங்கள். ஒரு காலத்தில், இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எல்லாம் இந்துக்களாக இருந்தவர்களே, பல சலுகைகளை பெற்றுக்கொண்டு மதம் மாறிய வம்சாவளியினர்களாத்தான் இப்பொழுள்ள இதர மதத்தவர்கள் ஏற்டும் வாதம் இருக்கிறது, அது உண்மையும் கூட. எனது பல இதர மத நண்பர்களே இதனை கூறியிருக்கிறார்கள். நம் பாரத தேசம் மகத்தானது, அதனை வஞ்சக எண்ணங்கள் புகுத்தி கெடுக்காதீர்கள். உங்கள் மத அடவுள் உங்களுக்கு நல்ல வழி காட்டட்டும்.


Nallavan
டிச 26, 2024 11:24

தமிழையே தாய்மொழியாக கொண்டவர்கள், தமிழர்களுக்கு புரியாத சமஸ்கிரத மொழியில் மந்திரம் சொல்வது ஏன்? சமஸ்கிரத மொழி பேசுபர்களை எவ்வாறு அழைப்பது


Kettavan
டிச 26, 2024 13:10

தமிழையே தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்களுக்கு புரியாத அரேபிய மொழியில் பாங்கு சொல்வது ஏன்? அரபி மற்றும் உருது மொழி பேசுபவர்களை எப்படி அழைப்பாய்?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 14:02

தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் அரபு மொழியில் தொழுவது ஏன் ???? டோன்ட் வொரி .... இப்படி யாரும் உன்னை கேட்க மாட்டாங்க .... ஏன்னா குலாவை மறைச்சு முக்காடு போட்டுவந்து கோழி புடிக்கிற ....


V RAMASWAMY
டிச 30, 2024 13:50

தமிழ் மொழியையே தமிள் என்றும், வெல்லத்தை வெள்ளம், பழத்தை, பளம் என்றெல்லாம் ல கரத்திற்கும் ள கரத்திற்கும், ன கருத்திற்கும் ண கரத்திற்கும் எவ்வித வித்தியாசம் தெரியாமல் பேசும் தமிளர்கள் மத்தியில் சம்ஸ்கிருத மந்திரம் ஒதுவதில் என்ன தப்பு? யாருக்கும் புரியாத உருது மொழியில் தர்காக்களில், மசூதிகளில் தமிளிலேயே பிரார்த்தனைகள் செய்கிறார்களே, அவர்களிடம் போய்க்கூறுங்கள் பார்க்கலாம்.


Sidharth
டிச 26, 2024 11:11

போயி செவுத்துல போயி முட்டிகிட்டு...


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 10:40

திராவிடர்கள் ஆரியர்களை விட ஹிந்து சமயத்தில் ஆழ்ந்த அறிவுடையவர்கள்.. பற்றுடையவர்கள்.. ஆரிய ராமனுக்கு சூரிய வழிபாடு கற்றுக்கொடுத்த திராவிட அகஸ்தியர் ஒரு உதாரணம் .... கோபுர கட்டிடக்கலை இன்னொரு உதாரணம் .... திராவிடர்கள் மதமற்றவர்கள் என்று உருட்டும் வந்தேறி கோமாளிகளைத் தமிழன் நம்பமாட்டான் ......


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 26, 2024 11:34

நண்பரே , முதலில் திராவிடம் என்பதே த்ரவிட என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானதாக ஒரு வரலாறு உண்டு ஆகவே யார் திராவிடர்கள் யார் ஆரியர்கள் என்பதுதான் தமிழ் நாட்டு பிரச்சினை. ஆந்திராவில் தெலுங்கு மொழி பேசும் அந்தணர்களை தெலுங்கர்களாகவும் மேற்கு வங்காளத்தில் வங்காள மொழி பேசும் அந்தணர்களை வங்காளிகளாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே உ வே சாமி நாத அய்யர் வழித்தோன்றல்களைக் கூட தமிழர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். தாய் மொழி தெலுங்காகக் கொண்ட நாயக்கர் இன மக்களை தமிழர்கள் என்று கூறும் ஈரோட்டு வழித்தோன்றல்கள் தமிழை தாய் மொழியாகக் கொண்ட அந்தணர்களை தமிழர்கள் அல்ல என் கிறார்கள்.


Barakat Ali
டிச 26, 2024 13:02

ஆரியர்களை விட அறிவில் சிறந்தவர்களாக இருந்த திராவிடர்கள் அவர்களது கலாச்சாரம், மொழி, இறைக்கொள்கைகள், சமூகப்பிரிவுகள் ஆகியவற்றை பகுதியாகவோ, முழுமையாகவோ ஏற்றதன் காரணம் ??


V RAMASWAMY
டிச 30, 2024 13:53

உங்கள் மத்தியில் தமிழர்கள் என்று மார்தட்டிக்கொண்டு உலாவும் பலப்பல அரசியல்வாதிகள் தான் வந்தேறிகள், அவர்களுக்கு ஓட்டுப்போட வெட்கமாயில்லை உங்களுக்கு?


V RAMASWAMY
டிச 26, 2024 10:04

தமிழையே தாய் மொழியாக கொண்டுள்ள பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என்றால், தெலுங்கு, கன்னட, மலையாள மொழி தாய மொழியாக உள்ள மற்றும் உருது பேசும் நபர்களை எவ்விதம் தமிழர்கள் என்று அழைக்கலாம்? பல எம் எல் ஏக்கள் மந்திரிகள் ஆந்திர, தெலுங்கானாவை சேர்ந்தவகளாயிற்றே ?


P.Sekaran
டிச 26, 2024 09:50

இன்னும் திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்தால் இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாற்றிவிட்டு ஒரு காலத்தில் நம் நாட்டை மற்ற மதத்தை மெஜாரிட்டியில் கொண்டு வந்துவிடுவார்கள். இப்பொழுதே நிறைய பேர் முஸ்லீம் மதத்திற்கும் கிறிஸ்த்து மதத்திற்கும் மாறி விட்டார்கள்.


J.Isaac
டிச 26, 2024 11:31

இந்து மத கடவுள் யார்?


Mario
டிச 26, 2024 09:48

எது பிஜேபி அரசா


ghee
டிச 26, 2024 10:15

இல்லை மணிப்பூர் அரசு


Nagendran,Erode
டிச 26, 2024 10:23

லண்டன் உனக்கு தமிழ் தெரியுமா?


Nallavan
டிச 26, 2024 09:39

பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் ஏழை, எளியவர்கள் பயன்படுத்தவே செயல் படுத்த படுகிறது பலன் பெரும் அதிக சதவிகிதம் நம்ம ஹிந்துக்களே


சம்ப
டிச 26, 2024 09:14

அது சாம்பார் அல்ல சம்பா நல்லா படி


ghee
டிச 26, 2024 10:14

எங்களுக்கு சம்பா சாம்பார்தான் சம்பா


ரஞ்சித்,திட்டக்குடி
டிச 26, 2024 10:25

இப்ப நீ என்ன பேர்ல கருத்தை போட்ருக்க ஏன் காலங்காத்தால....


Sampath Kumar
டிச 26, 2024 08:01

ஹிந்துக்களுக்கு ஏதிராகவா ? ஏந்த ஹிந்து ஏன்று கொஞ்சம் சொல்லு பார்க்கலாம் பிராமணர்களின் ஹிந்துவுவ அல்லது தமிழர்களின் ஹிந்துவா உன்னக்கு புத்தி இருந்தால் புரிந்து கொண்டு செயல் படு


ஆரூர் ரங்
டிச 26, 2024 08:17

நிச்சயம் ஒங்கோல் தலீவரு தமிழரல்ல.


ghee
டிச 26, 2024 09:11

அய்யோ சொம்பு...அப்போ திராவிடம் ஹிந்து இல்லையா


RAMAKRISHNAN NATESAN
டிச 26, 2024 11:30

வந்தேறி திருட்டுக் குடும்ப தலைவன் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை