உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்கலை தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி நீக்கம்: தமிழக அரசு மீது கவர்னர் குற்றச்சாட்டு

பல்கலை தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி நீக்கம்: தமிழக அரசு மீது கவர்னர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அண்ணா, பாரதிதாசன், பெரியார் பல்கலைகளில் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதியை வேண்டுமென்றே தமிழக அரசு நீக்கி உள்ளது,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.

அமைச்சர் பதில்

'பல்கலை தேடுதல் குழுவில், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., பிரதிநிதியையும் நியமிக்க வேண்டும், ' என தமிழக அரசுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தி இருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், 'கவர்னர் ரவி சட்டத்தை தன் கையில் எடுத்து செயல்படும் போக்கை அரசு கவனித்துக் கொண்டு இருக்கிறது,' எனக்கூறியிருந்தார்.

கட்டாயம்

இதனைத் தொடர்ந்து, கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை அண்ணா பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை ஆகியவற்றிற்கு, துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை கவர்னர் அமைத்தார். இக்குழுவில் அண்ணா பல்கலைக்கான தேடுதல் குழுவில், வேந்தரின் பிரதிநிதி, தமிழக அரசு மற்றும் பல்கலை சிண்டிகேட் பிரதிநிதி, யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றனர்.பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலையில் தமிழக அரசு, செனட் மற்றும் சிண்டிகேட் பிரதிநிதி, யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். தேடுதல் குழுவில் யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி இடம்பெறுவது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கட்டாயம். நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக இந்த தேடுதல் குழு அமைக்கப்பட்டது.

முக்கியம்

ஆனால், தமிழக அரசு வேண்டும் என்றே யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதியை விட்டுவிட்டு தேடுதல் குழுவை அமைத்து உள்ளது. இது சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுவதாகும். ஆனால், உண்மைகளை திரித்து அமைச்சர் தவறாக வழிநடத்துகிறார். யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்படும் தேடுதல் குழுவை நீதிமன்றங்கள் நிராகரிக்கக்கூடும். பல்கலை மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் துணைவேந்தர்களின் பங்கு முக்கியமானது. மாணவர்களின் நலன் கருதி, துணைவேந்தர் பதவியை காலியாக வைக்கக்கூடாது.தேடுதல் குழுவை அமைப்பதற்காக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும். யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதியுடன் கவர்னர் அமைத்த தேடுதல் குழுவை அமைப்பதற்கான உத்தரவை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் மாளிகை கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kasimani Baskaran
டிச 21, 2024 08:11

சாராய வியாபாரத்துக்கு அடுத்து பணம் கொழிக்கும் இடம் கல்வி. நீட் மூலம் பெரிய அளவு நன்கொடை என்று கொள்ளை அடித்ததற்கு ஆப்பு என்பதால் வேறு துறைகளுக்கும் கொள்ளைக்காரர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.


raja
டிச 21, 2024 05:49

அவங்கள எல்லாம் சேர்த்த எங்களால பல்கலை கழகத்தில் இருக்கும் தேன் களை எடுத்து வழித்து புறங்கை நக்க முடியாதே.....


J.V. Iyer
டிச 21, 2024 04:25

இதை பல்கலை கழகங்களுக்கு UGC வழங்கும் நிதி மானிய உதவியை உடனே நிறுத்துங்கள். எப்படியெல்லாம் இந்த மாடல் அரசு ரவுடித்தனம் செய்கிறது


AMLA ASOKAN
டிச 20, 2024 23:48

ஆட்சியாளர் ஆளுநர் மோதல் காரணமாக துணை வேந்தர் நியமிக்க படாமல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பல்கலைக் கழகங்கள் நடை பெறும் போது , கவர்னர் இல்லாமல் தமிழ் நாடும் இயங்கத்தானே செய்யும் . முக்கியமான மசோதாக்களின் மேல் அமர்ந்துகொண்டு இத்தகு கல்வி குறித்த நியமனங்களில் தலையிடுவது , பழமையான கருத்துக்களை கூறுவது இவருக்கு வாடிக்கை & பொழுது போக்கு . சுய விளம்பர பிரியர் .


பெரிய ராசு
டிச 20, 2024 22:05

நாசமாக போன திராவிடிய விஷம் ..உயர் கல்வியை விஷம் வைத்து கொல்லுகிறது, தமிழக இயற்கை வளத்தை குவாரி வைத்து கொள்ளை அடித்து கேரளா கடத்துகிறது , கேட்கின்ற மனிதர்களை அடிக்கிறது ...கேரள கொல்லை மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்ட அனுமதிக்கின்றது ..தமிழா நீயும் உன் சந்ததியும் மெல்ல அழிகின்றாய் இந்த திராவிட ஆக கழிவிய ஆட்சியில் ,,அதுசரி உனக்கி சூடு சொரணை ஏதும் கிடையது அல்லாவா...


Barakat Ali
டிச 20, 2024 21:35

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுக என்று திராவிட மாடல் கேட்பதே அதில் கடைந்து எடுக்கத்தான் ....


ஆரூர் ரங்
டிச 20, 2024 21:23

இதனால் ஏற்படப் போகும் கோர்ட் செலவு முழுவதையும் அமைச்சர்தான் சொந்தப் பணத்தில் ஏற்க வேண்டும் என நினைவுபடுத்தினால் நல்லது.


T.sthivinayagam
டிச 20, 2024 21:23

தமிழர்கள் வளர்ச்சியை பலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை


raja
டிச 21, 2024 05:53

கூமுட்டைகளுக்கு தமிழன் யார் திருட்டு திராவிடன் யார் ...திராவிடன் தமிழனை தமிழகத்தை சுரண்டி கொள்ளை அடித்து வளர்கிரானா இல்லை தமிழன் டாஸ்மாக்கில் குடித்து விட்டு குப்பிற அடித்து மட்டை ஆகி விட்டானா என்பது தெரியாது தான்....


GMM
டிச 20, 2024 21:02

மாநில கவர்னரின் நிர்வாக உதவியாளர் தான் தமிழகம். கவர்னர் முடிவு தான் மாநில சட்டம். அரசியல் சாசனம் செயல்படும் வரை கவர்னர் பதவி நிரந்தரம் . திமுக மக்கள் பிரதிநிதிகள் அதிக பட்ச ஆயுள் 5 ஆண்டுகள் ஒப்பந்த ஊழியர்களுக்கு சமம். கவர்னர் என்ன, இந்தியாவையே கவனிப்பதாக உடன் பிறப்புகளை மயக்க பேட்டி கொடுக்கலாம். செயல்படுத்த முடியாது. ஊர் குருவி பருந்து ஆகாது.


முக்கிய வீடியோ