உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் மேல் நடவடிக்கை: அனுமதி வழங்கினார் கவர்னர்!

ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் மேல் நடவடிக்கை: அனுமதி வழங்கினார் கவர்னர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில், மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக கவர்னர் அனுமதி வழங்கினார்.கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு, 3 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இவர் மீதும், அ.தி.மு.க., பிரமுகர் விஜய நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 2021ம் ஆண்டில் இருந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.புகார் அளித்த ரவீந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில், 'ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தாமதிப்பதாக கூறி, கடந்த மாதம் இவ்வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணையை எதிர்த்து ராஜேந்திரபாலாஜி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''ராஜேந்திர பாலாஜி மீது மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி கவர்னருக்கு அனுப்பப்பட்ட கோப்பு மீதான நிலை என்ன? கேள்வி எழுப்பினர்.கவர்னர் தரப்பில் உரிய அனுமதி வழங்காமல் தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. வழக்கு ஆவணங்களை மொழி பெயர்த்து வழங்கும்படி கவர்னர் அலுவலகம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேல் நடவடிக்கை எடுக்க கவர்னர் ரவி அனுமதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

அப்பாவி
ஏப் 16, 2025 08:02

இவரைக் கேட்டா அவரு என்ன நடவடிக்கை எடுத்தாரு. அவரைக் கேட்டா இவரை என்ன நடவடிக்கை எடுத்தாருன்னு மாத்தி மாத்தி கேள்வி கேட்டு அஞ்சு வருஷம் வெட்டியா ஓட்டிட்டாங்க. இன்னும் ஓட்டுவாங்க.


pmsamy
ஏப் 16, 2025 07:42

அதிமுக பாஜக கூட்டணி ல இருக்கும்போது இந்த மாதிரி செய்வது சிறப்பு


venugopal s
ஏப் 16, 2025 06:48

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு உண்டான மாற்றம் இது!


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 16, 2025 00:59

மோடி என் டாடினுலாம் சொன்னவர் எங்க ராஜேந்திர பாலாஜி, அவர் மேல பிரான்து கொடுக்க எப்புடியா விட்டிங்க ரவி.


K.n. Dhasarathan
ஏப் 15, 2025 21:17

பாவம் ஆளுநர், உச்ச நீதிமன்றம் குட்டு வைத்தபின் விழித்து இப்போது தலையை தேய்த்துக்கொண்டு, வேலை செய்ய ஆரம்பித்து விட்டார், ஐயா இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் கோப்புகளை எல்லாம் கவனிங்க.


Thetamilan
ஏப் 15, 2025 20:48

ஏனெனில் பழனிச்சாமி சாவின் காலடியில் தவழ்ந்து கொண்டே இருக்க தவறி விட்டார். அதுவும் போக காத்திருக்கவும் வைத்துவிட்டார் .


Srinivasan Krishnamoorthy
ஏப் 15, 2025 18:48

Nothing will happen


Srinivasan Krishnamoorthi
ஏப் 15, 2025 17:29

செந்தில் பாலாஜி கதை தான்


Ramaswamy Jayaraman
ஏப் 15, 2025 14:57

இவர் அனுமதி வழங்குவார். உடனடியாக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, இவர் சொல்வது செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வார்கள். இது அவசியமா.


Muralidharan S
ஏப் 15, 2025 14:54

இந்த இரண்டு திரவிஷ ஊழல் கட்சிகள் ஆட்சிகளில் இருந்து என்றுதான் தமிழக மக்களுக்கு நிஜமான விடியல் கிடைக்குமோ தெரியவில்லை.. சனி கூட ஏழரை வருடம்தான் ஒருவரை பிடித்து துன்புறுத்தும்... அதுவும் அவரவர் கர்மாவுக்கு ஏற்ப.. ஆனால், இந்த திராவிஷ கிரஹம் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக துவம்சம் செய்துகொண்டு வருகிறது தமிழகத்தை / தமிழக மக்களை ..காசுக்கு ஒட்டு மனப்பான்மை மக்களிடம் ஒழிந்தால் மட்டுமே இது சாத்தியம்.